நான் விக்கெட் எடுக்க இந்த அண்ணன் தான் காரணம் – அர்ஸ்தீப் சிங் அட்டகாச பேட்டி!

0
12546
Arsdeep

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் வேகப்பந்துவீச்சில் முதுகெலும்பாக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா.

இப்படிப்பட்ட திறமை மிக்க வேகப்பந்துவீச்சாளரை காயத்தால் இந்திய அணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இழந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு இது ஒரு பின்னடைவாக இருந்தாலும் இதன் மூலம் அர்ஸ்தீப் சிங் என்ற இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார். இவர் பும்ரா போல ஆட்டத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பந்து வீசக்கூடியவராக இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதிய பொழுது, அந்த ஆட்டத்தில் அபாயகரமான துவக்க ஆட்டக்காரர்கள் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரையும் பவர் பிளேவில் வீழ்த்தி இந்திய அணிக்கு ஒரு அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். அதேபோல் நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அபாயகரமான இடது கை பேட்ஸ்மேன்கள் குயின்டன் டீ காக், ரூசோவ் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி இந்திய அணியை பெரிய அளவில் நம்பிக்கை பெற வைத்தார். இதுவரை இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று போட்டியில் விளையாடியுள்ள இவர் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை ஓவருக்கு எட்டு ரன்கள் கீழே கொடுத்து வீழ்த்தி இருக்கிறார்

அர்ஸ்தீப் தனது சிறப்பான செயல்பாட்டிற்கான காரணத்தை தற்பொழுது கூறும் பொழுது “பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை நாங்கள் ஆய்வு செய்கிறோம். நானும் புவி பாயும் முதலில் கொஞ்சம் பந்தை ஸ்விங் செய்து தொடக்கத்திலேயே பேட்ஸ்மேன்களை வெளியேற்ற முயற்சி செய்கிறோம். புவி பாய் மிகவும் சிக்கனமாக பந்து வீசுவதால், பேட்ஸ்மேன்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள். இதனால் என்னால் அவர்களை எளிதாகத் தாக்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எனது வெற்றிக்கான பெருமைக்கு காரணம் அவர்தான். பேட்ஸ்மேன்கள் அவருக்கு எதிராக அடிக்கப் போவதில்லை. அதனால் அவர்கள் என் பந்துவீச்சில் அடிக்க வருகிறார்கள். இதனால் எனக்கு விக்கெட் கிடைக்கிறது. நாங்கள் எங்களுக்குள் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினோம். பேட்டிங் பார்ட்னர்ஷிப்பை போலவே பவுலிங் பார்ட்னர்ஷிப்பும் முக்கியமானது ” என்று கூறியுள்ளார்!