இந்த உலக கோப்பையில் இந்த பவுலர்தான் அதிக விக்கெட் எடுப்பார்.. லெஜெண்ட் ரிச்சர்ட்ஸ் கணிப்பு!

0
3945
Richards

கிரிக்கெட்டில் புதிய பாதைகளை திறந்து வைத்தவர்களில் மிக முக்கியமானவர் 70களில் அறிமுகம் ஆகி மொத்த கிரிக்கெட் உலகத்தையும் கலக்கிய விவியன் ரிச்சர்ட்ஸ்!

அன்றைய கிரிக்கெட் உலகத்தில் ஒரு பேட்ஸ்மேன் பயிற்சியில் கூட பந்தை நேராகத்தான் அடிக்க வேண்டும். அதேபோல் தரையோடுதான் அடிக்க வேண்டும். இதை மீறினால் பயிற்சியாளர் அந்த இடத்திலேயே தண்டிப்பார். இதுதான் மரபு ரீதியான கிரிக்கெட்!

- Advertisement -

அப்படியான காலத்திலேயே “நான் விரும்பும்படிதான் கிரிக்கெட் விளையாடுவேன்” என்று சொல்லி, கிராஸ் பேட் ஷாட்கள் விளையாடி எதிரணிகளை நிலைகுலைய வைத்தவர் இவர்.

இன்றைக்கும் பல பேட்ஸ்மேன்களின் ரோல் மாடலாக இருக்கக்கூடியவர். அன்றைய காலத்தில் டி20 கிரிக்கெட் இருந்திருந்தால், இவர்தான் மிக அதிகபட்ச விலைக்குப் போயிருக்கக் கூடிய வீரராக இருந்திருப்பார்.

90களில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இவர், அதற்குப் பிறகு சில அணிகளுக்கு மென்டராக இருந்து வந்திருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் 2013 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மென்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் 2016 முதல் 2020 வரையிலும், இதற்கு அடுத்து 2022ஆம் ஆண்டும் கியோட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு மென்டராக இருந்து வந்தார்.

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், எந்த பந்துவீச்சாளர் அதிக விக்கெட் வீழ்த்தக் கூடியவராக இருப்பார்? என்கின்ற கேள்வி இவரிடம் முன்வைக்கப்பட்டது. இவர் வெளிநாட்டு பந்துவீச்சாளர்களை தவிர்த்து, ஆசியக் கண்டத்து பந்துவீச்சாளர் ஒருவரை, அதிக விக்கெட் வீழ்த்தக் கூடிய பந்துவீச்சாளராக இருப்பார் என்று கணித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“ஷாகின் அப்ரீடியை நான் பாகிஸ்தானில் பார்த்திருக்கிறேன். நான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சில காலம் செலவிட்டிருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் அவருடைய மகத்தான வளர்ச்சியை பார்த்தேன். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளராக அவர்தான் இருப்பார். அவர்தான் என்னுடைய ஆள்!” என்று கூறி இருக்கிறார்!