மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்; புதிய வீரர் சேர்ப்பு!

0
330
ICT

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான   மூன்றாவது  ஒருநாள் போட்டிக்கு  இடது கை சுழற் பந்துவீச்சாளர்  ‘குல்தீப்  யாதவ்’  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் . இந்திய அணியின் மூன்று வீரர்கள்  காயம் காரணமாக  நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில்  பங்கேற்க முடியாததை அடுத்து ‘குல்தீப்  யாதவ்’ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்கள் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த  ‘குல்தீப்  யாதவ்’  சமீபத்தில் நடந்து முடிந்த  நியூசிலாந்து  அணிக்கு எதிரான போட்டியில்  தேர்வு செய்யப்பட்டார் . ஆனால்  அவருக்கு  டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில்  ஆடும் லெவனில்  இடம் கிடைக்கவில்லை . இந்நிலையில்  பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்துள்ள  இந்திய அணியில்  கேப்டன் ‘ரோகித் சர்மா’  வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென்  மற்றும் ‘ஆல்ரவுண்டர் ‘ ‘தீபக்  சஹார்’  ஆகியோர் காயம் காரணமாக  வெளியேறியதால்  குல்தீப் யாதவுக்கு  வாய்ப்பு கிடைத்துள்ளது .

பி.சி.சி.ஐ’இன் செயலாளர் ‘ஜெய் சா’ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குல்தீப் யாதவ் இந்திய அணியில்  இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . முதல் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ‘குல்தீப் சென்’  முதுகு தசை பிடிப்பின் காரணமாக  இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை.அவரை பரிசோதனை செய்த  அணியின் மருத்துவர்கள்  அவர் தேசிய அகடமி சென்று   உடற் தகுதியை  திரும்ப பெற  அறிவுறுத்தி உள்ளனர் .

மேலும் அணியின் ஆல் ரவுண்டர் ‘தீபக்சகர்’ இரண்டாவது போட்டியில் பங்கேற்ற நிலையில் மூன்று ஒவர்களை மட்டுமே வீசிய  அவர் கால் தசை பிடிப்பின் காரணமாக  அந்தப் போட்டியில் மேற்கொண்டு பங்கேற்க இயலவில்லை .போட்டியின் பின் மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்ட அவரும்  ‘தேசிய கிரிக்கெட் அகாடமி’ சென்று உடற் தகுதியை திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன்  ‘ரோஹித் சர்மாவுக்கு’  ஆட்டத்தின் போது  கைவிரலில் காயம் ஏற்பட்டது . இதனால் அவர் போட்டியின் போது  ‘டாக்கா’வில  உள்ள  மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார் எலும்பு முறிவு எதுவும்  இல்லை என்று பரிசோதனையில் வந்ததை அடுத்து  இந்திய:அணியின் ‘பேட்டிங்’கின் போது களம் இறங்கி அணியின் வெற்றிக்காக போராடினார் எனினும் இந்தியா அணி  5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது . இதனை அடுத்து  ரோஹித் சர்மா மருத்துவ நிபுணர்களின்  ஆலோசனைக்காக மும்பை சென்றுள்ளார் .

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பொறுத்து அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா ? என்று   தெரியவரும் நாளை நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் துணை கேப்டன் ‘கே.எல் .ராகுல்’ அணியை வழிநடத்துவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது .