பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது – ஹர்பஜன்சிங் பரபரப்பு கருத்து!

0
367
Harbajan singh

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நாளையோடு முடிவடைகிறது. தகுதி சுற்று ஏ குழுவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. இலங்கை அணி ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள குழுவிற்கும், நெதர்லாந்து இந்திய அணி இடம் பெற்று இருக்கும் குழுவிற்கும் வந்துள்ளது.

தகுதி சுற்றில் நாளை வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஜிம்பாப்வே அணிகள் மோத இருக்கின்றன. பெரும்பாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை சென்றது போல் ஆஸ்திரேலியா குழுவிற்கு செல்லவே அதிக வாய்ப்புகள் உண்டு. ஜிம்பாப்வே இல்லை ஸ்காட்லாந்து அணி இந்தியா இடம் பெற்று இருக்கும் குழுவிற்கு வர வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

இதையடுத்து நாளை மறுநாள் அக்டோபர் 22-ஆம் தேதி எட்டாவது டி20 உலக கோப்பையில் முதல் போட்டி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் கடந்த டி20 உலக கோப்பையின் ரன்னர் ஆன நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது. அதே நாளில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன.

இதற்கு அடுத்த நாள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் மோத இருக்கின்றன. இந்த போட்டி அதிக அளவு மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் ரசிகர்களிடம் இந்தப் போட்டி குறித்தான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது.

மேலும் இந்தப் போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளார்கள். இந்தப் போட்டிக்கான இந்திய அணி எப்படி அமையும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” இந்திய அணி சரியாக இருப்பதாக உணர்கிறேன். ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் ஆகியோர் அணியில் இருப்பார்கள். இவர்களுடன் சாகல் இருப்பார். அதன்பிறகு புவி, அர்ஸ்தீப் மற்றும் சமி இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் திறந்து பேசிய ஹர்பஜன் சிங் இதற்கு அடுத்த போட்டிகளில் இந்திய அணி எப்படி அமையலாம் என்று கூறினார். அவர் பேசும் பொழுது ” முகமது சமி நல்ல உடற் தகுதி பெறுவது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. உலககோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் முகமது சமியின் திறமையும் அனுபவமும் மிகவும் முக்கியம். பும்ரா இல்லாததால் அவரது தேவை இன்னும் அதிகமாகிறது. அவரும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன் ” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” அக்சர் படேல் பேட்டிங் நீளத்தை அதிகரிப்பதால் அஸ்வினுக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன். அஸ்வின் நீண்ட வடிவ கிரிக்கெட் போட்டியில் மிக நல்ல பேட்ஸ்மேன். மேலும் ஹர்சல் படேல் அஸ்வின் இருவரும் தேவைக்குத் தகுந்தபடி அடுத்தடுத்த ஆட்டங்களில் வாய்ப்புகளை பெறலாம் ” என்று கூறியுள்ளார்!