இந்த வருடம் ஐபிஎல் கோப்பை எந்த அணிக்கு? – மைக்கல் வாகன் கணிப்பு!

0
2915

இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளார் மைக்கேல் வாகன்.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. இது குறித்த பல்வேறு கணிப்புகளும் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

- Advertisement -

எந்த அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும்? எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது? யார் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பெறுவார்? யாருக்கு அதிக விக்கெட் விழும்? என்று பல்வேறு கணிப்புகளும் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்த வருடம் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு கமெண்டரி செய்கிறார். அவர் எந்த நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்று தனது கணிப்பை கொடுத்தார்.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்று கணிப்பு வெளியிட்டார்.

- Advertisement -

இதற்கு மத்தியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிரிக்கெட் குறித்து பல்வேறு கருத்துக்களை முன் வைக்க கூடியவர். அவர் இந்த வருடம் எந்த அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார். குறிப்பாக “சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு சற்றும் இல்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மே மாதம் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுக் கோப்பையை தட்டிச்செல்லும்.” ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது. அதன் பிறகு தொடர்ந்து 14 வருடங்களாக கோப்பையை வெல்லவில்லை. இரண்டு முறை இறுதி போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.