“அவங்க இப்படி வந்தாங்க நான் அப்படி போனேன்!” – முதல் சதம் அடித்த சுப்மன் கில் மாஸ் பேட்டி!

0
926
Gill

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என அதிர்ச்சி அளிக்கும் வகையில் இழந்து, தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது!

இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற மிக முக்கியத் தொடராகும். இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும் பொழுது, அடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் நிலை இருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து புஜாரா, ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட், அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார்!

இதை அடுத்து பெரிய முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 258 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக 513 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரர் இளம் வீரர் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். 152 பந்துகளைச் சந்தித்த அவர் 110 ரண்களை பத்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் விளாசினார். அடுத்து புஜாரா கொஞ்சம் அதிரடியாக விளையாடி அவரும் சதம் அடித்தார்.

இன்றைய நாள் போட்டிக்குப் பிறகு பேசிய சுப்மன் கில் ” நான் தனிப்பட்ட முறையில் எனக்கு முதல் டெஸ்ட் சதம் வர நீண்ட நாட்கள் எடுக்கிறது என்று நினைத்தேன். ஆனால் இன்றைய நாளில் எல்லா கடினமான விஷயங்களில் இருந்தும் வெளியில் வந்து விட்டேன். இந்தச் சதத்தின் மூலம் எனது குடும்பத்தினர், எனக்கு ஆதரவளித்தவர்கள், எனது நண்பர்கள் எல்லோருக்கும் அர்த்தம் கிடைத்திருக்கிறது. எந்த ஒரு வீரருக்கும் முதல் சதம் என்பது சிறப்பானது. என்னுடைய டெஸ்ட் கன்னி சதம் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இரண்டு பௌன்டரிகளை அடித்து சதத்தை எட்டுவது என்பது ஒரு உள்ளுணர்வாக இருந்தது. பந்துவீச்சாளர் விக்கட்டை சுற்றி வந்து வீசிய பொழுது, தேர்டுமேன் திசைக்கும் பாயிண்ட் திசைக்கும் இடையில் நிறைய இடைவெளி இருந்தது. அதனால்தான் அங்கு அடித்தேன். ஆனால் நான் ஆட்டத்தில் முழு நேரமும் அங்கு அடித்துக் கொண்டிருக்கவில்லை. மேலும் பீல்டர்கள் முன்னே வந்ததும், நான் அவர்களுக்கு மேல் தூக்கி அடிக்க செய்தேன். நான் ஆரம்பத்தில் ஒரு 13 ரன்கள் விளையாடிக் கொண்டிருந்தேன். பின்பு நான் 100 பந்துகளை சந்தித்த பொழுது 70 ரன்கள் எடுத்திருந்தேன். ஒரு பேட்ஸ்மேன் ஆக எப்பொழுது தாக்கி விளையாட வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்!” என்று தெரிவித்துள்ளார்!