இவர்கள் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்யாவிட்டாலும் ஃபீல்டிங் செய்தே அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துவிடுவார்கள் – கிளென் மேக்ஸ்வெல் புகழாரம்

0
1378
Glenn Maxwell RCB

ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அப்போட்டியில் பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக விளையாடினார். 34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 66* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அப்போட்டியில் இரண்டு இளம் வீரர்களான அனுஜ் ராவத்( டக் அவுட்) மற்றும் பிரபு தேசாய் (5 பந்துகளில் 6 ரன்கள் ) இருவரும் அவ்வளவு பெரிதாக ரன் அடிக்கவில்லை. இருப்பினும் அப்போட்டியில் இவர்கள் இருவரின் நோக்கம் பாசிட்டிவ் ஆக இருந்தது என்று கிளன் மேக்ஸ்வெல் தற்போது புகழ் பாடியுள்ளார்.

போட்டியில் எப்பொழுதும் பாசிட்டிவான நோக்கத்தில் இருக்க வேண்டும்

பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரரான மேக்ஸ்வெல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்களான அனுஜ் ராவத் மற்றும் பிரபுதேவா இருவரும் அவ்வளவு பெரிதாக ரன் அடிக்கவில்லை. இருப்பினும் அப்போட்டியில் இவர்கள் இருவரின் நோக்கமும் அணியின் வெற்றி மீதே இருந்தது. மிக பாசிடிவ் ஆன நோக்கத்தில் இவர்கள் இருவரும் போட்டியின் கடைசி நொடிவரை விளையாடினார்கள்.

ஒரு போட்டியில் உங்களால் ரன் அடிக்கவோ அல்லது விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் நீங்கள் அப்போட்டியில் பாசிட்டிவான நோக்கத்தில் இருக்க வேண்டும். அது ஒரு வீரருக்கு மிக முக்கியமான ஒன்று. அதே இந்த இரு வீரர்கள் மீது அப்போட்டி முழுவதும் இருந்தது என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

மேக்ஸ்வெல் கூறியவாறு அப்போட்டியில் விராட் கோலி மற்றும் ஃபேப் டு பிளேசிஸ் மிக அற்புதமாக எப்படி ஃபீல்டிங் செய்தார்களோ, அதேபோல அனுஜ் ராவத் மற்றும் பிரபு தேசாய் மிக மிக அற்புதமாகவே ஃபீல்டிங் செய்தனர். பவுண்டரிக்கு செல்ல வேண்டிய பல பந்துகளை இவர்கள் இருவரும் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரான மலோலன் ரங்கராஜன், “நான் எப்பொழுதும் சொல்வது ஒன்றுதான் இது ஒரு தொடர் செயல்முறை. டிரஸ்ஸிங் ரூமில் நாம் பேசும் பெரிய விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று சீராக இருப்பது. ஆதரவு ஊழியர்களின் கண்ணோட்டத்திலும், அவர்களது உதவியிலும் நாங்கள் என்ன செய்ய முயற்சித்தோமோ அதை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.