இவங்க ரெண்டு பேரையும் நம்பி இருந்தா நமக்கு உலக கோப்பை கிடைக்காது – கபில் தேவ் சர்ச்சை கருத்து!

0
628

50 ஓவர்களுக்கான உலகக் கோப்பை இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்த உலக கோப்பையை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி முழு வீச்சில் தயாராகி வருகிறது . கடைசியாக 12 வருடங்களுக்கு முன்பு 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா . கிட்டத்தட்ட 12 வருடங்களாக இந்திய அணி மற்றொரு உலகக் கோப்பை வெற்றிக்காக காத்திருக்கிறது .

இந்நிலையில் உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்தது . இதில் உலக கோப்பைக்கு ஆடப்போகும் 20 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.இவர்களில் இருந்து 15 பேர் இந்தியாவிற்காக உலக கோப்பை அணியில் இடம் பெறுவார்கள். இந்திய அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் கலந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு உள்ளது .

- Advertisement -

அணியில் இருக்கக்கூடிய முன்னணி வீரர்களை மட்டுமே நம்பி இருந்தால் நம்மால் கோப்பையை வெல்ல முடியாது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் உலக சாம்பியன் கபில் தேவ் . இதுகுறித்து பேசி உள்ள அவர் இந்தியா அணியானது தங்களது சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அதிகமாக நம்பியுள்ளது . அவர்கள் இருவரும் நம் நாட்டிற்காக கோப்பையை வாங்கி தருவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நடக்காத ஒன்று என்று கூறி இருக்கிறார் .

மேலும் இது தொடர்பாக பேசிய அவர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் தங்களது ஓய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் . சமீப காலமாக அவர்களால் தொடர்ந்து ரண் குவிக்க முடியவில்லை. கடந்த பத்து வருடங்களாக அவர்களில் வரும் தான் இந்திய அணியின் தூணாக விளங்கினார்கள் என்பதை மறுக்க முடியாது . ஆனால் தற்போது அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது . இந்திய அணியில் இருக்கக்கூடிய இளம் வீரர்கள் தாங்களாக பொறுப்புகளை எடுக்க முன்வர வேண்டும் . இன்னும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரையே நம்பி இருக்கக்கூடாது என்று கூறி இருக்கிறார்.

இது பற்றி தொடர்ந்து பேசிய கபில்தேவ் எப்போதும் ஒரு அணியானது இரண்டு முக்கியமான வீரர்களை சுற்றி கட்டமைக்கப்படும். அந்தக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் . ஒரு அணி இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டுமே நம்பி இருக்காமல் ஐந்து அல்லது ஆறு முக்கியமான வீரர்களைக் கொண்டு வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு இது எந்த ஒரு தனி நபரையோ சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை வெற்றியில் அருகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வீரரின் சிறிய பங்களிப்பு இருக்கும் என்று தெரிவித்தார் .

- Advertisement -

இந்திய அணியில் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றார்கள் . இந்த வருடம் உலக கோப்பையானது வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கின்றது . அந்த நேரத்தில் ரோகித் சர்மா தனது 37 வது வயதில் இருப்பார் . விராட் கோலி 36 ஐ நெருங்கிக் கொண்டிருப்பார் . இவர்கள் இருவரும் இன்னும் எவ்வளவு காலங்கள் கிரிக்கெட் ஆடுவார்கள் என்று தெரியாது . அதனால் இந்திய அணியின் நிர்வாகம் திறமையான இளைஞர்களைக் கொண்ட அணியை கட்டமைக்க இப்போது இருந்தே முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். நமது தேசத்தில் திறமைக்கு என்று மே பஞ்சமில்லை அப்படி திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சர்வதேச அளவில் சிறந்த வீரர்களாக மாற்ற வேண்டியது அணி நிர்வாகத்தின் கடமை என்று கூறி முடித்தார் .