இந்த இரண்டு இந்திய வீரர்களால் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என நினைத்தேன் – பங்களாதேஷ் கேப்டன் பேட்டி!

0
588

இரண்டு இந்திய வீரர்கள் எங்களிடமிருந்து கிட்டத்தட்ட வெற்றியை பறித்துவிட்டார்கள் என நினைத்தேன் என்று பங்களாதேஷ் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டியளித்தார்.

வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை டாக்கா மைதானத்தில் விளையாடியது.

- Advertisement -

துவக்க வீரர் தவான்(7), விராட் கோலி(9) இருவரும் சோபிக்கவில்லை. ரோகித் சர்மா 27 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் வெளியேற இந்திய அணி மிகவும் தடுமாறியது.

இறுதிவரை போராடிய கேஎல் ராகுல் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க 41.2 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.

பங்களாதேஷ் அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் 41 ரன்கள், சாகிப் அல் ஹசன் 29 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் பின் வந்த வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் தடுமாறி அவுட்டாகினர். 128 ரன்களில் ஐந்தாவது விக்கெட் இழந்ததபின் ஓரிரு ரன்கள் இடைவெளியில் வரிசையாக 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

வங்கதேச அணி வெற்றி பெற இன்னும் 51 ரன்கள் தேவைப்பட்டபோது இந்தியா எளிதாக வென்றுவிடும் எதிர்பார்த்த போது, முஸ்தபிஷர் ரஹ்மான்(10*) மற்றும் மெகதி ஹாசன்(38*) இருவரும் ஜோடி சேர்த்து இந்திய அணியின் நம்பிக்கையை தகர்த்து வெற்றி பெற்றனர்.

பங்களாதேஷ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றபின் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டியளித்தாவது:

டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மெகதி ஹாசன் விளையாடிய கடைசி ஆறு ஏழு ஓவர்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது. சகிப் மற்றும் நான் இருவரும் மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதாக ஸ்கோரை சேஸ் செய்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் இருவரும் எங்களிடமிருந்து அப்படியே போட்டியை பறித்துக் கொண்டார்கள். ஆட்டம் எங்களை விட்டு போய்விட்டது என்று நினைத்துவிட்டேன். ஆனால் கடைசியில் மெகதி ஹாசன் நின்று விளையாடியது, எங்களுக்காக வெற்றியை பெற்று தந்தபோது முதலில் நம்பவே முடியவில்லை. கேப்டன் பொறுப்பேற்று விளையாடியது எத்தகைய மகிழ்ச்சியையும் அழுத்தத்தையும் மாறி மாறி கொடுக்கிறது என்பதை ஒரே போட்டியில் புரிந்து கொண்டேன்.” என்றார்.