இந்த உலகக்கோப்பையில் இந்த இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள்தான்; அது ரோஹித் விராட் இல்லை!

0
150
ICT

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் நாளையோடு தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்து, நாளை மறுநாள் பிரதான சுற்றுப் போட்டிகள் ஆரம்பிக்கிறது.

இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

கடந்த வருடம் இதே போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு தோல்வியடைந்து, அந்த உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது.

இந்தத் தோல்வி இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியது. தற்பொழுது ரோகித் சர்மா தலைமையில் புதிய பந்துவீச்சு படை, புதிய பேட்டிங் படை, புதிய ஆட்ட அணுகுமுறையோடு ஒரு புதிய அணி எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடருக்குச் சென்றுள்ளது

இந்த டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய சூழலில் எந்த இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்கத்தை உருவாக்க கூடிய வகையில் விளையாடுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சஞ்சய் பாங்கர் இது குறித்துக் கூறும் பொழுது ” சூரியகுமார் முதல் முறையாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு முதலில் செல்லும் எந்த பேட்ஸ்மேனுக்கும் ஆடுகளத்தின் கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகத்தை பழகுவதுதான் பிரச்சனையாக இருக்கும். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது பிரச்சனையாக இருக்காது. இந்த வகையில் பார்த்தால் சூரியகுமார் யாதவுக்கு ஆஸ்திரேலிய சூழ்நிலைகள் எந்த கஷ்டத்தையும் கொடுக்காது. அவர் வழக்கம் போல அதிரடியாக அங்கு ரன்கள் எடுப்பார் ” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய சஞ்சய் பாங்கர்
கேஎல் ராகுல் குறித்து பேசும்பொழுது “ராகுலின் ஆட்டம் சமீபத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்தச் சுற்றுப் பயணத்தில் அவர் இதுவரை இரண்டு அரை சதங்கள் பயிற்சிப் போட்டியில் அடித்துள்ளார். எல்லாவற்றிலும் விட நாம் அவரிடம் பார்க்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று அவர் சரளமாக விளையாடுகிறார். அவர் மிகச் சுலபமாக பவுண்டரி எல்லையைத் தாண்டி பந்தை அடிக்கிறார். ராகுல் போல் பந்தை அடிக்க கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஒரு அணிக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் வேகமாக விளையாடி ரன்கள் எடுப்பதை திட்டமாக வைத்துள்ளது” என்று கூறியுள்ளார்!