பைனலில் இந்த அணிகள்தான் விளையாட வேண்டும் ; ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டரில் ஓட்டெடுப்பு!

0
20367
Devillers

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் முதல் சுற்றைக் கடந்து அரையிறுதி சுற்றை எட்டி இருக்கிறது.

இந்த அரை இறுதி சுற்றில் முதல் அரை இறுதி போட்டியில் நாளை மறுநாள் ஒன்பதாம் தேதி சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வதற்கு இருக்கின்றன!

இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை அடிலைட் ஓவல் மைதானத்தில் சந்திக்க இருக்கிறது. இந்த மைதானம் பக்கவாட்டில் இருபுறத்திலும் மிகவும் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது அரை இறுதியில் யார் வெல்வார்கள்? இறுதிப் போட்டியில் யார் விளையாடுவார்கள்? இறுதிப் போட்டியில் யார் விளையாடினால் மிகவும் நன்றாக இருக்கும்? என்று பரவலாக சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்!

இப்படியான நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை காய்ச்சல், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரர், கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸையும் விட்டு வைக்கவில்லை.

அவரும் ட்விட்டர் பக்கத்தில் இறுதிப்போட்டியில் எந்த அணிகள் மோதிக்கொள்ள வேண்டும் என்று ஓட்டெடுப்பு நடத்தி வருகிறார். அதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள வேண்டுமென்று 70% வாக்குகள் பதிவாகியும் இருக்கிறது.

இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் இதுகுறித்து தனது விருப்பத்தை கூறும் பொழுது ” பேண்டஸி இறுதியானது! இதுவரை 70% பேர் இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இரு அணிகளுமே நல்ல அற்புதமான வரிசையை கொண்டு நல்ல பார்மில் இருக்கின்றன. இரண்டு அரை இறுதி மோதல்களுமே மிகச்சிறப்பானதாக இருக்கும். ஆனால் எனது விருப்பம் மற்றும் வாக்கு இந்தியா பாகிஸ்தான அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்வதற்கே. அது நாவில் எச்சில் ஊற வைக்கும் நிகழ்வாக அமையும் ” என்று ஒரு கிரிக்கெட் ரசிகர் போன்று கூறியிருக்கிறார். இதற்கான டுவிட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!