இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் தான்: ரோகித் சர்மா ஓபன் டாக்!

0
67

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர்கள்தான் காரணம் என்று மூன்றாவது டி20 போட்டி முடிவுற்ற பிறகு ரோகித் சர்மா பேட்டி அளித்தார்.

வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 73 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் 20களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்திருந்தது.

- Advertisement -

இந்த மைதானத்தில் 165 ரன்கள் எந்த ஒரு அணியும் சேஸ் செய்ததில்லை. இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தபோது காயம் காரணமாக பாதியில் வெளியேறினார், மறுமுனையில் நின்ற சூரியகுமார் யாதவ் ஸ்ரேயாஸ் ஐயருடன் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தார்.

அதற்கு அடுத்ததாக வந்த ரிஷப் பண்ட் நிதானத்துடன் விளையாட இந்திய அணி கடினம் இல்லாமல் இலக்கை நோக்கி சென்றது. அரைசதம் கடந்த சூரியகுமார் யாதவ் 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து ஆட்டம் இழந்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரிஷப் பண்ட் 33 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது. போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

- Advertisement -

“மிடில் ஓவர்களில் இந்திய அணி பந்துவீசிய விதம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இந்த மைதானத்தின் போக்கை சரியாக பயன்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். இந்திய அணி பெரிதளவில் ரிஸ்க் எடுக்கவில்லை. மிடில் ஓவர்களில் பந்துவீச்சு மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பான பார்ட்னர்ஷிப் இந்த இரண்டும்தான் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது. குறிப்பாக ஷ்ரேயாஸ் மற்றும் சூரியகுமார் இருவரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை எளிதாக்கிவிட்டனர்.

இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. அதனை புரிந்துகொண்டு பந்திற்கு ஏற்றவாறு சரியான ஷாட் அடிக்கவில்லை என்றால், எளிதாக விக்கெட் விழுந்து விடும். நான் மேலிருந்து பார்த்தேன். இதை மிகச் சிறப்பாக இந்திய வீரர்கள் மிடில் ஓவரில் செய்திருக்கின்றனர். அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது அதற்குள் குணமடைந்து விடுவேன்.” என தனது காயம் குறித்தும் அவர் பதில் அளித்தார்.