“இலங்கையுடன் விளையாடும் முதல் ஆறு பேர் இவங்கதான்” -கவுதம் கம்பீர் கணிப்பு!

0
682
Gambhir

பிறக்க இருக்கும் புதிய ஆண்டில் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் இலங்கை அணியை எதிர்த்து உள்நாட்டில் விளையாடுகிறது!

இதில் முதலில் நடக்கும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் அடுத்து நடக்கும் ஒருநாள் தொடருக்கு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டி தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார்!

இந்த இரு தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருந்தது குறிப்பாக டி20 அணியில் ரோஹித் சர்மா கேஎல் ராகுல் விராட் கோலி ரிஷப் பண்ட் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன் டி20 அணியிலும் இசான் கிசான் இரு அணிகளிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்!

இந்த இரு தொடர்களில் ஒருநாள் தொடருக்கு யார் துவக்க வீரர் மற்றும் முதல் ஆறு வீரர்கள் யார் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார்!

இது குறித்து அவர் கூறும் பொழுது
” ரோகித் சர்மாவுடன் யார் துவக்க வீரராக களம் இறங்குவது என்று நாம் இன்னும் பேசிக் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வீரர் இரட்டை சதம் துவக்க இடத்தில் இறங்கி அடித்திருக்கிறார். அவ்வளவுதான் விவாதம் முடிந்து விட்டது அவர்தான் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும். அடித்த அந்த இரட்டை சதத்திற்கு நியாயம் என்னவென்றால் அவர் தனது உள்நாட்டில் விளையாட வேண்டும் என்பதுதான் ” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அவர் முப்பத்தைந்து ஓவரில் 200 ரங்களை எடுத்தார். அவரைத் தாண்டி அந்த இடத்திற்கு யாரையும் யோசிக்க முடியாது. அவரால் அணிக்கு ரன் கொடுக்கவும் முடியும் விக்கட்டை காப்பாற்றவும் முடியும். இதனால் நான் சொல்வது யார் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற விவாதமே கூடாது அவர் தான் இறங்க வேண்டும். இதே வேறு யாராவது இரட்டை சதம் அடித்திருந்து இப்படி ஒரு விவாதம் நடந்திருந்தால் நாம் இந்நேரம் எவ்வளவு கோபம் அடைந்து இருப்போம். ஆனால் இசான் கிசான் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்த விவாதம் முடிந்து விட்டது!” என்று காட்டமாகவே தெரிவித்திருக்கிறார்!

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் ஆறு இடங்களுக்கான வீரர்கள் யார் என்று கூறும் பொழுது
” துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இசான் கிசான் இறங்குவார்கள். இதற்கு கீழே சென்று பார்ப்பது கொஞ்சம் கடினம் தான் அங்கு மூன்றாவது இடத்தில் விராட் கோலி, நான்காவது இடத்தில் சூரிய குமார், ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் வருவார்கள். ஸ்ரேயாஸ் ஒன்றரை வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறினார்தான். ஆனாலும் அதை அவர் சிறப்பாக எதிர்கொள்ள தயாராகிவிட்டார். இங்கு எல்லாவற்றிலும் பலமான வீரர் என்று யாரும் கிடையாது. அவர் தற்பொழுது தனது பலவீனத்தை எப்படி நிர்வகிக்கிறார் என்பதுதான் முக்கியம். எனவே அவர் ஐந்தாம் இடத்தில் இருக்க வேண்டும். ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா வந்து விடுவார் ” என்று கூறி முடித்திருக்கிறார்!