இந்த 2 அணிகள்தான் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதும் – யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் அசத்தல் கணிப்பு!

0
493
Gayle

எட்டாவது டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. முதலில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, யுஏஇ, நமீபியா ஆகிய 8 அணிகள் தகுதி சுற்று போட்டியில் விளையாடுகின்றனர். இதில் தேர்வு பெறும் 4 அணிகள், 12 அணிகள் பங்குபெறும் பிரதான சுற்றுக்குள் நுழைவார்கள்!

12 அணிகள் பங்குபெறும் பிரதான சுற்றுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
இந்தச் சுற்றில் 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் யார் என்று முடிவாகும்.

- Advertisement -

இதுவரை நடந்துள்ள 7 டி20 உலகக் கோப்பை தொடர்களில் 2012 மற்றும் 16ஆம் ஆண்டு இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ஒரே அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய பொழுதும் அந்த அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்து இருந்தார்!

யுனிவர்சல் பாஸ் என்று ரசிகர்களால் வியப்போடு அழைக்கப்படும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் அடையாளமாக விளங்கும் வீரர்களில் ஒருவர். இவர் இந்தமுறை நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எந்த இரு அணிகள் மோதும் என்று தன் கணிப்பை கூறியிருக்கிறார்.

இதுபற்றி கிறிஸ் கெய்ல் கூறும்பொழுது
” இந்தமுறை நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் என்று நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் புதியவர் என்பதால் கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இது வெஸ்ட் இண்டீஸ் அணி ஆபத்தான அணி என்று நிரூபிப்பதில் எந்த பிரச்சனையையும் உண்டாக்காது ” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உடல் பலம் மிக்க, மிகப்பெரிய சிக்சர்கள் விளாச கூடிய அதிரடி ஆட்டக்காரர்களான கரீபிய வீரர்களை அவ்வளவு எளிதில் இந்த உலகக் கோப்பையில் சாதாரணமாக கருதிவிட முடியாது என்பது நிதர்சனம்தான்!