“எப்படி ஆரம்பிச்சாலும் நல்லா முடிப்பேன்.. என்னால முடியும் நான் நம்பறேன்!” – சுப்மன் கில் அதிரடி பேட்டி!

0
619
Gill

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 399 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது!

இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வந்த ருத்ராஜ் எட்டு ரன்களில் ஆட்டம் இழந்த போதிலும், மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கில், ஸ்ரேயா உடன் சேர்ந்து மிகச் சிறப்பாக இன்னிங்சை கட்டமைத்து அசத்தினார்கள்.

- Advertisement -

இந்த ஜோடி நேற்று 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இருவருமே சதமும் அடித்தார்கள். இவர்கள் ஏற்படுத்தி தந்த வலிமையான அடித்தளத்தை பயன்படுத்தி, கேப்டன் கேஎல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பெரிய ரன்களுக்கு இந்திய அணியைக் கொண்டு சென்றனர்.

இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆரம்பத்தில் 19 பந்துகளில் தன்னுடைய முதல் 9 ரன்களை எடுத்தார். அதே சமயத்தில் தொடர்ந்து விளையாடி 92 பந்துகளில் தன்னுடைய ஆறாவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை நிறைவு செய்தார்.

நேற்றைய போட்டியில் அவர் மொத்தமாக, 97 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் குவித்தார். நடப்பு ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச குவித்த வீரராக இவரே இருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய சுப்மன் கில் ” ஆமாம் இது மிக நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரு அணியாக திருப்தி அடைகிறோம். எங்களுக்கு சரியான நேரத்தில் மொமெண்டம் கிடைத்திருக்கிறது.

மெதுவாக ஆரம்பிப்பது என்பது சூழ்நிலையை பொருத்தது. நிச்சயமாக என்னால் பின்பகுதியில் அதை சரி செய்து கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் என்னால் அதைச் செய்ய முடியும்.

மேலும் கே.எல். ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் விளையாடிய விதத்தில் அவர்கள் தொடர்ந்து வேகத்தை எடுத்துச் சென்றார்கள். எந்த மைதானம் என்றாலும் 400 ரன்களை துரத்துவது கடினம். பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய வேலையைச் செய்தார்கள்!” என்று கூறி இருக்கிறார்!