“5 செகண்ட்ஸ் இருந்தது.. இந்த காரணத்தாலதான் நாங்க தோத்தோம்..!” – இலங்கை கேப்டன் வித்தியாசமான பேச்சு!

0
3843
Mendis

நடப்பு உலகக் கோப்பை தொடர் லீக் சுற்றின் கடைசி வாரத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் அரையிறுதி வாய்ப்பை சுத்தமாக இழந்துவிட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன.

எனவே இந்த போட்டி குறித்து பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வெளியில் இருக்கும் ரசிகர்களுக்கு இருக்கவில்லை. எனவே இந்த போட்டிக்கு பொதுவாக யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த பேட்ஸ்மேனும் ஆட்டம் இழக்காத முறையில் டைம் அவுட் என்கின்ற வகையில் இலங்கை அணியின் மேத்யூஸ் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதன் காரணமாக இந்த போட்டி குறித்து திடீரென சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த போட்டிக்கு முக்கியத்துவமும் உருவாகியது. இப்படியான போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் 41 ஓவரில் 280 ரன்களை விரட்டி வென்றது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சரித் அசலங்கா 108 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு நஜிபுல் சாந்தோ 90, கேப்டன் ஷகிப் அல் ஹசன் 82 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கி தந்தார்கள். முடிவில் 41.1 ஓவரில் பங்களாதேஷ அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் “சரித் அசலங்கா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் குறைவாக இருந்தோம். சில இளம் நல்ல வீரர்கள் போட்டியில் நன்றாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சில பாசிட்டிவான விஷயங்கள் நம்பிக்கை கொடுக்கின்றன.

எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் உலகக்கோப்பைக்கு முன்பு காயம் அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் இருந்து விளையாடு இருந்தால் எங்களுக்கு சிறப்பான முடிவுகள் கிடைத்திருக்கும். இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

மேத்யூஸ் களத்திற்கு பேட்டிங் செய்ய வந்த பொழுது இரண்டு நிமிடத்திற்கு 5 வினாடிகள் மீதம் இருந்தது. அப்போதுதான் அவர் ஹெல்மெட்டை கழட்டி விட்டு, புது ஹெல்மெட் கேட்டார். நடுவர்கள் சரியான முடிவை எடுக்காதது ஏமாற்றமாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!