“வார்னர் பாபர் மில்லர் கிடையாது.. வெளிநாட்டு பேட்டர்களில் இவர்தான் படு டேஞ்சர்!” – எச்சரிக்கை கொடுக்கும் இந்திய முன்னாள் வீரர்!

0
343
Warner

நாளையுடன் உலகக்கோப்பை பயிற்சி போட்டிகள் முடிய, ஒரு நாள் ஓய்வில், அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் உலகக் கோப்பை முதல் போட்டி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துவங்குகிறது!

நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பாக ஆசியக் கண்டத்தைத் தாண்டிய கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் எப்படி? செயல்படுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

மாறிவரும் கிரிக்கெட் சூழ்நிலையில் ஆடுகளங்கள் பெரும்பாலும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய சாதகமாக தட்டையாகவே கொடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் பேட்ஸ்மேன்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி இங்கிலாந்து கடந்த உலகக்கோப்பையில் தந்தது போல பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆடுகளம் கொஞ்சம் சுழற் பங்கு வீச்சுக்கும் மெதுவாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே எந்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? என்கின்ற விவாதம் வெளியில் சென்று கொண்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “தென்ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் அவரை விட வேறு யாரும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. இவர் சிறப்பு என்னவென்றால் பந்தில் லென்த்தை சீக்கிரம் கணித்து அதிரடியாக விளையாடக் கூடியவர். அவருக்கு நல்ல பவர் கிடைக்க கிரீசில் உள்ளே இருப்பார்.

- Advertisement -

அவர் மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்தாலும் உள் வட்டத்தில் ஐந்து பேர் ஃபீல்டிங் இருப்பதால், அவருக்கு விளையாடுவதற்கு இடைவெளிகள் கிடைக்கும். அவர் எப்படி சர்வதேச கிரிக்கெட்டில் குறைவாக மதிப்பிடப்படுகிறார் என்றே தெரியவில்லை. நான் அவரை மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன்.

தென் ஆப்பிரிக்க அணி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் மிடில் ஆர்டரில் வரக்கூடிய பேட்ச்மென்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர் மிகவும் திறமையான வீரர் அவர் சிறப்பாக செயல்படுவார் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேலும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களில் நியூசிலாந்தின் கான்வே மற்றும் இங்கிலாந்தின் டேவிட் மலான் ஆகியோர் சிறப்பாக செயல்பட கூடியவர்கள். இவர்கள் துவக்க வீரர்களாக வருகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்