பாபர் ஆசம் போல் விராட்கோலி கிடையாது – உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்!

0
65
Virat baber

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி கடைசி சதமடித்து இன்றோடு 993 நாட்கள் ஆகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் விராட்கோலி இப்படி ஒரு பெரிய சரிவை பேட்டிங்கில் சந்திப்பார் என்று அவரிடம் அல்ல அவரைப் பிடிக்காதவர்கள் இடம் கூறியிருந்தாலும் அவர்கள் நம்பி இருக்கவே மாட்டார்கள். இது கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நம்பமுடியாத ஒன்றாகத் தொடர்கிறது!

ஐபிஎல் தொடருக்கு பிறகு சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வுபெற்ற விராட் கோலி அடுத்து இங்கிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ், இரண்டு ஒருநாள் போட்டி இன்னிங்ஸ், 2 t20 இன்னிங்ஸ் என ஆர் இன்னிங்ஸ்களில் விளையாடினார். ஆனால் அந்த ஆறு இன்னிங்சிலும் ஒரு அரைசதம் கூட வரவில்லை. மேலும் அவர் முன்பைவிட வெகு எளிதாய் தன் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

இதையடுத்து இங்கிலாந்து தொடர் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பு இந்திய இளம் அணி ஒன்று ஜிம்பாப்வே சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு விராட்கோலி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் வருகின்ற இருவத்தி ஏழாம் தேதி துவங்க இருக்கிற ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குகிறார். இந்த மிகப்பெரிய போட்டியில் விராட் கோலி மீண்டும் சிறப்பான நிலைக்கு திரும்புவார் என்றும் திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்களும் இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. பாகிஸ்தான் அணியுடன் இதுவரை 7 இன்னிங்சில் மூன்று அரை சதங்களுடன் 311 ரன்களை 77.75 என்ற ரன் சராசரியில் விராட் கோலி விளாசி இருக்கிறார். தற்போதைய இந்திய வீரர்களில் யாரும் 200 ரன்களைக் கூட தொட்டு இருக்கவில்லை.

விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தொடர்பாக, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அக்யூப் ஜாவித் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் ” சிறந்த வீரர்களில் இரண்டு வகையான வீரர்கள் இருக்கிறார்கள். வகையான வீரர்கள் தங்கள் பேட்டியில் ஏற்படும் சரிவிலிருந்து மிகச் சீக்கிரமாக மீண்டு வந்து விடுவார்கள். சிலரால் அப்படி வர முடியாது. உதாரணமாக பாபர், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள். இவர்களின் பலவீனம் என்று எதையும் கண்டறிய முடியாது. ஆனால் விராட் கோலிக்கு வெளியே செல்லும் பந்துகளில் பிரச்சனை இருக்கிறது. இதைப் பலமுறை ஆண்டர்சன் பயன்படுத்தியிருக்கிறார். இதனால் விராட் கோலிக்கு கொஞ்சம் காலம் எடுக்கிறது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக பேசிய அவர் ” ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விராட் கோலி சரியாக விளையாட முடியாமல் போய் இந்திய அணி தோற்றால், பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் தீபக் ஹூடாவை ஏன் கலை மறக்கவில்லை என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்துவிடும். ஆனால் யுனைடெட் அரபு எமிரேட் ஆடுகளங்கள் பேட்டிங் பார்மில் இல்லாத வீரர்கள் மீண்டும் தனது சிறப்பான நிலைக்கு வர உதவி செய்யக் கூடியதாகத்தான் இருக்கும்” என்றும் நம்பிக்கை கூறினார்!