“ஸ்மித் ரூட் கிடையாதுங்க.. கடந்த 8-10 வருஷமா இந்த 2 பேருதான் கிரிக்கெட்டை ஆள்றாங்க!” – ஹேசில்வுட் வெளிப்படையான கருத்து!

0
3300
Australia

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் எப்பொழுதும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

மிகச் சிலரே பேட்ஸ்மேன் இல்லாமல் கும்ப்ளே போல் நட்சத்திர அந்தஸ்தை எட்டியவர்களாக இருந்தார்கள். கபில்தேவ் சிறந்த ஆல் ரவுண்டர் என்கின்ற அடையாளத்தோடு நட்சத்திர அந்தஸ்தை எட்டி இருந்தார்.

- Advertisement -

ஆனாலும் இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் எட்டிய நட்சத்திர அந்தஸ்தை மற்றும் பொருளாதார பயன்களை மற்றவர்கள் எட்டியது கிடையாது என்று கூறலாம்.

இந்த வகையில் கவாஸ்கர் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்டிங் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் உச்சகட்டத்தில் இருந்த பொழுது அவர்களது அதிபயங்கரமான வேகப்பந்துவீச்சை ஹெல்மெட் இல்லாமல் எதிர்கொண்டு ரன் சேர்த்தவர்.

இதற்கு அடுத்து 90களில் பிற்பகுதியில் சச்சின் டெண்டுல்கர் தன் மாயாஜால பேட்டிங் மூலம் கிரிக்கெட் உலகை கட்டி ஆண்டார். இதற்கு அடுத்து விராட் கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வெளிப்படுத்திக் கொண்ட ஒரே பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் கவாஸ்கர், சச்சின் மற்றும் விராட் கோலி மூவருமே அவர்களுடைய காலத்தில் இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேன் களில் முன்னணி இடத்தை பெற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இவர்களுக்கு பின்னால் வரக்கூடியவர்களாகவே இருந்தார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த மெக்ராத் என்று கூறப்படும் ஜோஸ் ஹேசில்வுட் கடந்த எட்டு பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? என்கின்ற தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“கடந்த எட்டு முதல் பத்து வருடங்களாக கிரிக்கெட் உலகத்தில் முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக இந்தியாவின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவர்தான் இருந்து வருகிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!

சில வாரங்களுக்கு முன்னால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரகளை எட்டிய இரண்டாவது வீரர் என்கின்ற சாதனையைப் படுத்திருந்தார். முதல் இடத்தில் விராட் கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!