உலகக் கோப்பை காய்ச்சல் தற்சமயத்தில் வெகுவாக பரவ ஆரம்பித்துவிட்டது. நேற்று முதல் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் துவங்கி இருக்கிறது!
நேற்று நடைபெற்ற மூன்று பயிற்சி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொள்ள இருந்த போட்டி திருவனந்தபுரத்தில் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்டது.
மற்றுமொரு போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் முக்கியமாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் நியூசிலாந்து மோதிய போட்டிகள் நியூசிலாந்து வென்றது.
இந்த நிலையில் இன்று இங்கிலாந்து அணியை கவுகாத்தி மைதானத்தில் இந்திய அணி பயிற்சி போட்டியில் சந்திக்க இருக்கிறது. பயிற்சி போட்டி மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் உலகக் கோப்பை குறித்தும் இந்திய அணி குறித்தும் பல கருத்துக்களை நேற்று முதல் பேசி வருகிறார். இந்த நிலையில் நடக்க இருக்கும் உலக கோப்பையில் எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்கின்ற தன் கணிப்பை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“அரை இறுதியில் நிச்சயமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இருக்கும். உலகக் கோப்பையில் எப்பொழுதும் அப்செட் இருக்கும் என்பதால் நான் ஐந்து அணிகளை தேர்வு செய்கிறேன். இந்தியா, ஆஸ்திரேலிய,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு வெள்ளைப்பந்து டிராபி தேவைப்படுகிறது.
ஆல்ரவுண்டர்கள் என்று எடுத்துக் கொண்டால் நிறைய பேர் சுற்றி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் மார்ஸ், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, தற்பொழுது நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை இங்கிலாந்து கொண்டு வந்து இருக்கிறது. இவர்கள் உலகக்கோப்பையில் கவனம் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள்!” என்று கூறியிருக்கிறார்!