“சச்சினை விட கோலிய அதிகம் பேசனும்.. அவர் உருவாக்க போற சாதனையை யாராலும் உடைக்க முடியாது!” – உலக கோப்பை வென்ற இந்திய வீரர் அதிரடி கருத்து!

0
286
Virat

உலகக்கிரிக்கெட்டில் தற்பொழுது மிகவும் முன்னணியில் இருக்கும் வீரராக இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இருந்து வருகிறார்.

பேட்ஸ்மேன் என்கின்ற வகையில் மட்டும் இல்லாமல் களத்தில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றிலும், மேலும் அவர் உடல் தகுதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திலும், இந்தியா தாண்டி இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய முன்னுதாரணமாக இருக்கிறார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்திருக்கிறார். தற்பொழுது விராட் கோலி மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 48 சதங்கள் அடித்திருக்கிறார். இன்னும் இரண்டு சதங்கள் அடிக்கப்பட்டால் உலகக் கிரிக்கெட்டின் மாபெரும் சாதனை தகர்க்கப்படும்.

இதன் காரணமாக தனி ஒரு வீரராக நடப்பு உலக கோப்பை தொடருக்கு சுவாரசியத்தை கூட்டக்கூடியவராக விராட் கோலி இருந்து வருகிறார். மேலும் இந்த தொடரில் சதத்தை நெருங்கி இரண்டு முறை அவர் தவற விட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இல்லையென்றால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலேயே சச்சின் சாதனை உடைந்திருக்கும்.

மேலும் பேட்டிங்கில் ஒரு சிறிய சரிவை சந்தித்த பிறகு மீண்டும் வந்த விராட் கோலி மகிழ்ச்சியான முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவர் பேட்டிங் என்று மட்டும் இல்லாது அணியில் களத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல் அற்புதமானதாக இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறும் பொழுது “நாம் அனைவருமே சச்சின் செய்திருக்கும் சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் விராட் கோலி வரும் காலத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அதிக அரை சதம், மேலும் அதிக ரன்கள் என்று பல சாதனைகளை முறியடிக்க போகிறார். உண்மையில் எதிர்காலத்தில் விராட் கோலி உருவாக்கும் சாதனைகளை உடைப்பது கடினமானது.

விராட் கோலியை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். இந்த உலகக் கோப்பையில் அவரின் சிறப்பான விஷயம் அவர் ரன் எடுத்து வருவது மட்டுமல்ல, அவரிடம் இருக்கும் அதற்கான பசி மற்றும் களத்தில் அவர் ஃபீல்டிங்கில் வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

விராட் கோலி இடம் நீங்கள் தயவு செய்து இப்பொழுது விளையாடுவது போலவே தொடர்ந்து விளையாடுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவருக்கு அவருடைய குடும்பத்தார் கொடுக்கும் முக்கியத்துவமும், அவர் மீது அவர்கள் கொண்டு இருக்கிற கருத்துக்களும் அற்புதமானவை என்று கூறி இருக்கிறார்!