எங்கள் அணியில் ஒரு சிலருக்கு கோவிட் தவிர இந்த நோய்யும் இருப்பது வருத்தம் அளிக்கிறது – கேப்டன் ரிஷப் பண்ட

0
116
Rishabh Pant

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று இரவு நடந்த முடிந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 87 ரன்கள் குவித்தார்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடத் தொடங்கிய டெல்லி அணி 117 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 25 ரன்கள் குவித்தார். சென்னை அணியில் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மொயின் அலி அசத்தினார்.

- Advertisement -
பாசிட்டிவாக இருந்து முடிவெடுக்க வேண்டும்

போட்டி முடிந்த பின்னர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.”எல்லா ஏரியாக்களிலும் அவர்கள் எங்களை ஓரம் கட்டி விட்டார்கள். இன்று சென்னை அணியில் விளையாடி அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல் பட்டார்கள். பொதுவாக எங்களது அணி தோல்வியை தழுவினாலும், அந்தப் போட்டியில் இறுதிவரை போராடித்தான் தோல்வியை தழுவும்.

ஆனால் இன்றைய போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் நாங்கள் தோல்வியை தழுவி இருக்கிறோம். எங்களுக்கு மூன்று போட்டிகள் மீதமிருக்கிறது. அந்த மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். தற்பொழுது அதுதான் எங்களுடைய எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

எங்களது அணியில் உள்ள ஒருசில நபர்களுக்கு கொரோனா தொற்று மற்றும் வயிற்று தொற்று ஏற்பட்டது. இதை ஒரு காரணமாக நான் சொல்ல விரும்பவில்லை, இதிலிருந்து கடந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். நாங்கள் தற்பொழுது பாசிட்டிவாக இருந்து ஒரு சில விஷயங்களை முடிவு செய்தாக வேண்டும். எஞ்சியுள்ள ஆட்டங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றி கிட்டும் வகையில் செயல்பட வேண்டும்”, என்று ரிஷப் பண்ட் நேற்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

- Advertisement -