திறமை இருந்தும் பாண்டியாவுக்கு சிக்கல்.. ரோஹித் கம்பீர் விரும்பும் புதிய டி20 கேப்டன்.. திட்டம் சரி வருமா?

0
40

இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கையோடு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கேப்டன் பதவியை விட்டு விலகியது மட்டுமல்லாமல் டி20 ஃபார்மெட்டில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.

அவர் மட்டுமல்லாமல் மேலும் இரண்டு இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தங்களது ஓய்வை அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பிறகு இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நிலவுகிறது. அடுத்த டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் இரண்டு வருடங்களே இருக்கும் நிலையில் இளம் வீரரை கேப்டனாக நியமிப்பது எளிதான காரியம் இல்லை. இந்த சூழ்நிலையில் வருகிற ஜூலை 27-ம் தொடங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகும் இன்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 கேப்டன்சி குறித்த விவகாரம் காரணமாக அதுவும் இறுதியாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளிவந்துள்ள தகவலின் படி ரோகித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளர் ஆன கம்பீர் ஹர்திக் பாண்டியாவை அடுத்த டி20 கேப்டனாக நியமிக்க விரும்பவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக டி20 ஸ்பெசலிஸ்ட் சூரியகுமார் யாதவை அடுத்த கேப்டனாக நியமிக்கவே இருவரும் விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி நிலையாக இருப்பதில்லை என்றும் காயம் காரணமாக அவர் இந்திய அணியை விட்டு விலக நேர்ந்தால் ஒரு கேப்டனாக மட்டுமின்றி அது இந்திய அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதற்கு அவரது சமீபத்திய உடற்பகுதி அறிக்கைகளே எடுத்துக்காட்டாக காட்டப்படுகிறது. மேலும் சில ஊடக அறிக்கையின்படி கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோரும் சூரியகுமார் யாதவையே கேப்டனாக விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அடுத்த 2026 டி20 உலக கோப்பை வரை சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் கிளப்பிய குழப்பம்.. சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கம்

ஹர்திக் பாண்டியா 100 டி20 போட்டிகளில் விளையாடி 26.64 பேட்டிங் சராசரியோடு 140.88 ஸ்ட்ரைக் ரைட்டில் நான்கு அரை சதங்களுடன் 1492 ரன்கள் குவித்துள்ளார். சூரியகுமார் யாதவ் 68 டி20 போட்டிகளில் விளையாடி 167.74 ஸ்ட்ரைக் ரைட்டில் நான்கு சதங்கள் மற்றும் 19 அரை சதங்களுடன் 2340 ரன்கள் குவித்து இருக்கிறார். சூரியகுமார் யாதவும் கேப்டனாக இந்திய டி20 அணியை வழிநடத்தியவர் என்பதால் அந்த அனுபவமும் ரோகித் சர்மாவின் கீழ் விளையாடிய அனுபவமும் இருப்பதால் இது நிச்சயம் கை கொடுக்கும் என்று இந்திய அணி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -