பவுலர்ஸ் இருக்காங்க; யார் விக்கெட் எடுப்பாங்க? – பாகிஸ்தான் அணியை சீண்டிய ஆகாஷ் சோப்ரா!

0
32
Aakash chopra

நாளை யுனைடெட் அரபு எமிரேட்டில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கிறது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் மிகப்பெரிய போட்டி நடக்க இருக்கிறது!

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றியான பேச்சு என்பது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியை பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்திய அணியை எடுத்துக்கொண்டால் பேட்டிங்கில் மிக வலிமையாகவே இருக்கிறது. ஓய்வு அளிக்கப்பட்டிருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்ப வந்திருக்கிறார். ஆனால் முகமது சமி ஜஸ்பிரித் பும்ரா என பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத அணியாக இந்திய அணி இருக்கிறது. அதே சமயத்தில் பந்துவீச்சு துறையில் சுழற்பந்து வீச்சில் துறையை எடுத்துப்பார்த்தால் யுஸ்வேந்திர சாகல், ஆர் அஸ்வின், ரவி பிஷ்நோய் பலமாக இருக்கிறது.

பாகிஸ்தான் அணியை எடுத்துக்கொண்டால் அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆசமையே அதிகம் நம்பி இருக்கிறது. அதற்கடுத்து முஹம்மது ரிஸ்வான், பகர் ஜமான் ஆகியோர் இருக்கிறார்கள். பந்து வீச்சு என்று எடுத்துக்கொண்டால், வேகப்பந்து வீச்சுக்கு சாகின் ஷா அப்ரிடி இல்லாமல் பலவீனமாகவே இருக்கிறது. மேலும் சுழற்பந்து வீச்சு துறையை எடுத்துக்கொண்டால் சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரிய அளவில் சாதித்தவர்கள் கிடையாது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா பாகிஸ்தான் அணியின் பலவீனங்களைப் பற்றி மிக விரிவாகப் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ” அவர்களிடம் நிறைய சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே விக்கெட் எடுக்கும் திறமையோடு இல்லை. அவர்களில் யார் பாகிஸ்தான் அணிக்காக விக்கெட் எடுத்து தரக்கூடிய திறமையில் இருக்கிறார்கள்? அவர்கள் அனைவருமே ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்கள். சதாப் கான் பிஎஸ்எல் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் சர்வதேச போட்டிகளில் அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. ஒருநாள் போட்டிகளில் கூட பெரிய விக்கெட் எதையும் எடுக்கவில்லை. அவர் பாகிஸ்தான் அணிக்காக விக்கெட் எடுக்கும் சுழற்பந்துவீச்சாளர் கிடையாது. அவர் சாகலோ அல்லது ரசீத் கானோ இல்லை” என்று தெரிவித்தார்!