அப்ப எனக்கு சச்சினும் டிராவிட்டும்; இப்ப எனக்கு இவங்கதான் – ரஜத் பட்டிதார் வெளிப்படையான பேச்சு!

0
443
ICT

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணியுடன் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு இன்று கிளம்பியுள்ளது!

தற்பொழுது ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய மண்ணில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில், பெங்கால் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மற்றும் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வரும் நடுவரிசை வலதுகை பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதில் முகேஷ் குமார் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ஒரு அபூர்வ வீரர் ஆவார். ஆனால் ரஜத் பட்டிதார் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடுகின்றவர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு வீரரின் காயம் காரணமாக பெங்களூர் அணிக்குள் எதிர்பாராதவிதமாக வந்த ரஜத் பட்டிதார், ப்ளே ஆப்ஸ் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் சதம் மற்றும் அரைசதம் அடித்து, 15 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்தினார். இதற்கடுத்து மத்தியபிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றார். அடுத்து இந்திய ஏ அணியில் இடம் பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு இந்திய அணிக்குள்ளும் இவரை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது சில கருத்துக்களை அவர் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். அவர் பேசும் பொழுது
” என்னுடைய சிறுவயதில் முன்மாதிரியாக கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் டிராவிட் சார் இருந்தார்கள். தற்பொழுது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருக்கிறார்கள். இவர்கள் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக தொடர்ந்து செயல் படுகிறார்கள். தற்போது இவர்கள் தான் என்னுடைய முன்மாதிரி ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் விராட் கோலி உடன் இணைந்து விளையாடியதை பற்றி பேசும்பொழுது ” என்னுடைய முன்மாதிரி வீரர் விராட் கோலியுடன் டிரெஸ்ஸிங் அறையை பகிர்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். அவருடன் சேர்ந்து விளையாடுவது எனது கனவு. களத்திற்கு வெளியேயும் என்னுடைய பேட்டிங் பற்றி அவரிடம் பேச சென்றால், அவர் எப்போதும் உதவியாக இருப்பார். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் ” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்!