இளம் கேப்டன் திடீர் விலகல்; பரபரப்பு!

0
5906
Pooran

மேற்கிந்திய தீவுகள் அணியின் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பதவி வகித்து வந்த நிக்கோலஸ் பூரன் , தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .

தங்களுடைய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தகுதி சுற்று போட்டிகளிலேயே தோல்வி அடைந்து வெளியேறியதால் அதற்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.இவர் கடந்த மே மாதம் பொல்லார்ட் இடமிருந்து கேப்டன் பதவியை பெற்றுக் கொண்டார்.

இவரது தலைமையின் கீழ் மேற்கிந்திய தீவுகள் அணி சராசரியாக சில வெற்றிகளை பெற்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தோல்விகளை தழுவியதும். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அவர்கள் இந்த டி20 உலக கோப்பையில் தகுதி சுற்றிலேயே வெளியேறியதும் பெரிய ஏமாற்றமாக அமைந்தது இதற்காக தார்மீக பொறுப்பேற்று தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ..

இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக தலைமை ஏற்று அவற்றில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளார் 15 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள அவர் அதிலும் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளார்.

தன்னுடைய முடிவு பற்றி கூறியுள்ள அவர்”டி20 உலகக் கோப்பையின் பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு நான் கேப்டன் பதவியைப் பற்றி நிறைய யோசித்தேன்” என்று பூரன் கூறினார். “நான் மிகுந்த பெருமையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன், கடந்த ஆண்டு முழுவதுமாக எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். T20 உலகக் கோப்பை நம்மை வரையறுக்கக் கூடாது, மேலும் வரவிருக்கும் விமர்சனங்களில் நான் உடனடியாக ஈடுபடுவேன். நாங்கள் ஒரு அணியாக மீண்டும் கூடும் வரை, மார்ச் மற்றும் அதற்கு அப்பால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிகளுக்கு தயாராக நிறைய நேரம் கொடுக்க விரும்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

“வெஸ்ட் இண்டீஸ் வெள்ளை பந்து கேப்டன் பதவியில் இருந்து இப்போது விலகுவதன் மூலம், இது அணியின் நலன்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் நல்லது என்று நான் நம்புகிறேன், ஏனெனில் ஒரு வீரராக நான் அணிக்கு என்ன வழங்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார். “நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நான் தீவிரமாக விரும்புகிறேன், மேலும் முக்கியமான நேரங்களில் தொடர்ந்து ரன்களை குவிப்பதில் முழு கவனம் செலுத்துவதே அணிக்கு நான் கொடுக்கக்கூடிய மிக மதிப்பு.” என்றும் தெரிவித்துள்ளார்.

27 வயதான நிக்கோலஸ் பூரன் இதுவரை 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,555 ரன்களை குவித்திருக்கிறார் அதில் 1 சதமும் 11 அரை சதங்களும் அடங்கும் .

72 போட்டிகளில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன் 1,472 ரன்களை குவித்திருக்கிறார் அதில் 9 அரை சதங்கள் அடங்கும் ..

கேப்டன் பொறுப்பில் இருக்கும்போது அவருடைய இயல்பான ஆட்டம் பாதிக்கப்பட்டது கண்கூடாகாவே தெரிந்தது இதஃன் காரணமாக கடந்த முறை அவரை பெரிய விலை கொடுத்து ஏலத்தில் எடுத்த சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் அவரை அணியில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது