இவர் திரும்பி வந்தால்தான் இந்திய அணிக்கு உலகக்கோப்பை; இல்லனா ரொம்ப கஷ்டம் – ஆரோன் பின்ச் வெளிப்படையான கருத்து!

0
13258
Aaron Finch

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் டெஸ்ட் தொடரை மோசமாக ஆரம்பித்தாலும் மூன்றாம் டெஸ்டிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்றபோதிலும் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியதையடுத்து தற்காலிக கேப்டன் பொறுப்பு ஸ்மித்க்கு வழங்கப்பட்டு அவரது தலைமையில் அணி புதுவித புத்துணர்ச்சியோடு களம் இறங்கி ஒருநாள் தொடரில் முதலில் இருந்து பட்டையைக் கிளப்பி வருகிறது.

- Advertisement -

மும்பை வான்கடேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும் , ஆந்திரம் மாநிலம் விசாகபட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய பேட்ஸ்மென்கள் தடுமாற, ஆட்டம் கையை விட்டு செல்ல மிகபெரிய பேசு பொருளாக அமைந்தது.

இந்த தோல்வியின் மூலம் இந்த ஒருநாள் தொடரானது 1-1 க்கு என்ற நிலையில் சமநிலையானது இதனால் நாளை சென்னையில் கோப்பை யாருக்கு என்று நிர்ணயிக்க போகும் மூன்றாவது போட்டின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இது பற்றி ஆராயும் போது இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமாக அமைந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் மட்டும் நான்கு முறை பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது

- Advertisement -

இது பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில் “இந்த ஆண்டு இறுதியில் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருந்தாலும் வரும் ஜூன் மாதத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது
இந்திய அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும் பவுலிங் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணியின் பேட்டிங் குறித்து கூறுகையில் “தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான அடித்தளம் அமைத்துக் கொடுப்பதன் மூலம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மெண்ட்கள் ஆக்ரோஷமாக விளையாட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அணியின் பலமாக சுழற் பந்துவீச்சு இருந்தாலும் மிக பெரிய பலவீனமாக வேகப்பந்துவீச்சு உள்ளது. இந்திய அணியில் தற்போது சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அணியில் ஏதோ ஒரு குறை காணப்படுகிறது. இந்த குறையை காயத்தில் இருந்து மீண்டு வர அறுவைச்சிகிச்சை செய்துள்ள வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்பினால் மட்டுமே அந்தக் குறையை சரி செய்ய இயலும் ஏனென்றால் பும்ரா போன்ற பவுலர்கள் தான் இன்றைய பேட்ஸ்மன்களை அச்சுறுத்துகிறார்கள். அவர் அணியில் இல்லையென்றால் இந்தியாவின் வெற்றி கைக்கு கிட்டினாலும் வாய்க்கெட்டாமல் போகும் ” என்றார்!