“டெல்லி கேப்பிடல்ஸ்” அணி வீரரின் அதிரடி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி!

0
435

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் வெற்றி பெற்று சமனில் முடிந்தது. தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டி மழையின் காரணமாக பதினோரு ஓவர்களைக் கொண்டதாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

11 ஒவர்களை கொண்டதாக ஆட்டம் நடத்தப்பட்டதால் வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரண்களை சேர்க்க முனைந்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தன. வேகமாக ரன்களை குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆடியதால் தென்னாப்பிரிக்கா விரைவாக விக்கெட் களை இழந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 61 ரண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

அந்த சூழ்நிலையில் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லரின் அபாரமான ஆட்டத்தினால் ஆரம்ப சரிவிலிருந்து மீண்ட தென்னாப்பிரிக்கா அணி ஒரு வலுவான ஸ்கோரை எட்டியது. அதிரடியாக ஆடிய மில்லர் 22 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளின் உதவியுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் ஆட்டம் இழந்தார். அவருக்கு துணையாக மகாலா 5 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 18 ரண்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா அணி 11 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது . மேற்கிந்தியடிகள் அணியின் பந்துவீச்சில் செல்டன் காட்ரெல் மற்றும் ஓடியன் ஸ்மித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அகில் ஹுசைன்,அல்சாரி ஜோசப் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிரிண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரண்களை வேகமாக உயர்த்தினர். முதல் நான்கு ஓவர்களுக்கு உள்ளாகவே 60 ரகளை கடந்திருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. எனினும் தென்னாபிரிக்க அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை பரபரப்பாகினர் .

- Advertisement -

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ரோமன் பவலின் அதிரடி ஆட்டத்தால் 10.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா அணி. இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக ஆடிய ரோமன் பவல் 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியின் உதவியுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சில் மகாலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.