43 வயது.. 27 வருட கனவு.. டி20 உ.கோ-ல் உலக சாதனை படைத்த உகாண்டா வீரர்.. பவுலிங் புது ரெக்கார்ட்

0
458
Nsubuga

ஐசிசி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று 2 போட்டிகள் இந்திய நேரப்படி காலையில் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியில் கயானா மைதானத்தில் பப்புவா நியூ கினியா மற்றும் உகாண்டா அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 43 வயதான உகாண்டா பந்துவீச்சாளர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் உலகச்சாதனை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய உகாண்டா அணி வெறும் 77 ரன்களுக்கு 19.1 ஓவரில் பப்புவா நியூ கினியா அணியை சுருட்டியது. அந்த அணியில் மொத்தம் எட்டு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள். இதே அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தப் போட்டியில் உகாண்டா அணியின் பந்துவீச்சில் 43 வயதான பிராங்க் என்சுபகா அசத்தலான உலகச் சாதனையைப் படைத்தார். அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி அதில் இரண்டு மெய்டன்கள் செய்தார். இதில் மிகக் குறிப்பாக அவர் மொத்தம் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முழுதாக நான்கு ஓவர்கள் பந்துவீசி குறைந்த ரன்கள் கொடுத்த வீரர் என்கின்ற சாதனையை, டி20 உலக கோப்பை வரலாற்றில் படைத்திருக்கிறார். 23வருடங்களுக்கு முன்பாக கிரிக்கெட் விளையாட வந்த அவர், தற்போது 47 வது வயதில் தன் பெயரை உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடர் உகாண்டா அணிக்கு முதல் உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் உகாண்டா அணி வெற்றி பெற்றதன் மூலமாக, தமது முதல் உலகக் கோப்பை தொடரில் பெற்ற முதல் வெற்றி என்கின்ற வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இதையும் படிங்க : அமெரிக்காவில் கிரிக்கெட்டை விற்க இப்படி பண்ணலாமா?.. இந்தியா பாக் போட்டி என்ன ஆகுமோ.. மைக்கேல் வாகன் விமர்சனம்

உகாண்டா அணியின் இந்த வரலாற்று வெற்றியில் இவரின் உலகச் சாதனையும் சேர்ந்திருக்கிறது. ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து ஆப்பிரிக்காவில் இருந்து டி20 உலகக்கோப்பை தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் தங்களது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணி தோற்று இருந்தது. இந்த நிலையில் மீண்டு வந்து பப்புவா நியூ கினியா அன்னைக்கு எதிராக முதல் வெற்றியை உலகக் கோப்பை தொடரில் பெற்றிருக்கிறது.