தற்காலிகமாய் தப்பித்த வெஸ்ட் இண்டீஸ் ; ஒரே ஆட்டத்தில் மொத்தமாய் மாறும் காட்சிகள்!

0
3246
West Indies

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதான சுற்றுக்கு நேரடியாக 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதி நான்கு அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மிக முக்கியமான ஆட்டமொன்றில் பங்கேற்றன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் தோல்வியைத் தழுவி இருந்தது.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த ஆட்டம் போல் இல்லாமல் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர்கள் ஓரளவுக்கு சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். ஆனாலும் திடீரென நடுவரிசையில் வழக்கம்போல் லீவிஸ், நிக்கோலஸ் பூரன், புரூக்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆட்டம் இழந்தார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி திடீரென ஒரு பெரிய சரிவை சந்தித்தது. இதற்கடுத்து துணைக் கேப்டன் ரோமன் பவல் மற்றும் அஹேல் உசைன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் கொஞ்சம் ஆடினார்கள். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சார்லஸ் 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களம் கண்ட ஜிம்பாப்வே அணி மிகச் சிறப்பான துவக்கத்தை கண்டது. ஆனால் இன்னிங்சை எப்படி எடுத்துக்கொண்டுபோய் முடிப்பது என்கின்ற அனுபவம் இல்லாத காரணத்தால் தேவையில்லாமல் பந்தை அடிக்க போய் தொடர்ந்து ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து 122 ரன்களுக்கு 18.2 ஓவர்களில் அடங்கி விட்டார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் மிகச் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களுக்கு 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்த பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து அயர்லாந்து ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸ் என நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று உள்ளன. அடுத்து கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்து அணியை சந்திக்கிறது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து அணியை சந்திக்கிறது.

- Advertisement -

இந்த பி பிரிவில் குழுவில் முதல் இடம் பிடிக்கும் அணி இந்தியா இடம்பெற்றுள்ள பி பிரிவில் இடம் பெறும். இந்த வகையில் பார்த்தால் தற்போது ஸ்காட்லாந்து இல்லை ஜிம்பாப்வே இந்திய குழுவில் வரவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் தகுதி சுற்று ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில் இடம்பெறும். இந்தவகையில் இலங்கை அணி இந்தியா இடம்பெற்றுள்ள குழுவில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம்.