டி20 பவர் பிளேவில் சதம் அடித்து பயங்கர சாதனை படைத்த தென்னாபிரிக்க அணி!

0
3313
Wi vs Sa

வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸின் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் இறுதி தொடராக தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

இன்று நடந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார்கள்.

அந்த அணியின் கையில் மேயர்ஸ் 27 பந்தில் 51 ரன்கள், கேப்டன் ரோமன் பவர் 18 பந்தில் 41* ரன்கள் எடுக்க, மூன்றாவது வீரராக வந்த சார்லஸ் 39 பந்தில் அதிரடி சதம் அடித்து தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை வதம் செய்தார். இதில் மொத்தம் பத்து பவுண்டரி 11 சிக்ஸர்கள் அடக்கம். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 258 ரன்கள் குவித்தது. சார்லஸ் அதிவேக டி20 சர்வதேச சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை பெற்றார்.

இதை எடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஜோடி குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்றிக்ஸ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திருப்பி ஒரு மிகப்பெரிய பதிலடி தர ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

இந்த ஜோடி இப்படி விளையாடும் என்று வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது இந்தப் போட்டியை பார்த்த யாருமே நம்பி இருக்க மாட்டார்கள். வெறும் 15 பந்துகளில் அரை சதத்தை கடந்து குறைந்த பந்தில் டி20 சர்வதேச போட்டியில் சதம் அடித்த தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையை குயிண்டன் டி காக் பெற்றார்.

இந்த ஜோடி இணைந்து பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் 102 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு ஓவர்களில் 98 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக இருந்தது. தற்பொழுது இதை தென் ஆப்பிரிக்கா அணி முறியடித்து இருக்கிறது.

சர்வதேச டி20 கிரிக்கெட் பவர்பிளேவில் அதிக ரன்கள் :

தென் ஆப்பிரிக்கா 102 ரன்கள்
வெஸ்ட் இண்டீஸ் 98 ரன்கள்
அயர்லாந்து 93 ரன்கள்
நெதர்லாந்து 91 ரன்கள்