வலிகளுக்குப் பின்னால் இருக்கும் சிரிப்பு உங்க டீம் ஃபேன்ஸே உங்க அவுட்டுக்காக… இந்த ட்வீட்டுக்கு லைக் போட்ட ரவீந்திர ஜடேஜா ; ட்வீட்டர் இணைப்பு!

0
752
Jadeja

நடப்பு ஐபிஎல் தொடர் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று நினைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் அந்த அணி விளையாடும் எல்லா மைதானங்களிலும் நிரம்பி வருகிறார்கள்!

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மட்டும் அல்லாது பிற அணியின் ரசிகர்களும் மகேந்திர சிங் தோனிக்குச் சிறப்பான மரியாதை அளிக்கும் விதமாக மஞ்சள் ஜெர்சியை அணிந்து மைதானத்திற்குள் அவருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள்!

- Advertisement -

இதுவெல்லாம் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் மகேந்திர சிங் தோனி பேட் செய்வதை பார்க்க வேண்டும் என்று, அவருக்கு முன்னதாக பேட் செய்ய வரும் ரவீந்திர ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பேனர்கள் பிடிக்கிறார்கள்.

இந்த இடத்தில்தான் அவர்களது ரசிக தன்மை எல்லையை மீறுகிறது. இது தனிப்பட்ட முறையில் ரவீந்திர ஜடேஜாவின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்று ரசிகர்கள் சிந்திக்கவில்லை.

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் ரவீந்திர ஜடேஜா. இந்தத் தொடரில் அவருக்கு இது மூன்றாவது ஆட்டநாயகன் விருதாகும்.

- Advertisement -

நேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே “மகி பாய்க்கான உற்சாக முழக்கங்களை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நான் நீண்ட நேரம் பேட் செய்தால், அவர் பேட் செய்ய வருவதற்காக நான் அவுட் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார்!

டாக்டர் ராஜ்குமார் என்பவர் ட்விட்டரில் “அவரது சிரிப்புக்குப் பின்னால் மிகப்பெரிய வலி இருக்கிறது. நம்புங்கள் இது மிகப்பெரிய அதிர்ச்சி. உங்கள் அணி ஆதரவாளர்கள் நீங்கள் அவுட் ஆகவேண்டும் என்று வேண்டிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இத்தனைக்கும் நீங்கள் மூன்று ஆட்டநாயகன் விருது வாங்கிய பின்னும் விமர்சிக்கப்படுவது எப்படி இருக்கும் ” என்று ட்விட் செய்திருக்கிறார்.

தற்பொழுது ரவீந்திர ஜடேஜா அவரது இந்த ட்வீட்டுக்கு லைக் போட்டு தனது மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். சென்னை அணி ரசிகர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சென்னை அணியின் ரசிகர்களை சிலர் பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!