முகமது ரிஸ்வான் ஜெர்சி காலர் பேட்ஜின் ரகசியம் என்ன?

0
793
Rizwan

நடப்பு எட்டாவது டி20 உலக கோப்பை பல எதிர்பாராத திருப்பங்களோடு பரபரப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர்களில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் மிகச்சிறந்த ஒன்றாக இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது!

இந்த உலகக்கோப்பையின் தகுதி சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இலங்கை அணியை நமீபியா அணி வென்றது, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் வென்று வெளியேற்றியது என்று சுவாரசியத்திற்கு பஞ்சமே கிடையாது.

- Advertisement -

அதேபோல் பிரதான சுற்றில் பலம் கொண்ட இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தியது, பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது என்று சுவாரசியம் மேலும் சூடு பிடித்து பறக்க தொடங்கி இருக்கிறது.

இந்தக் காரணங்களால் அரை இறுதி சுற்றுக்குள் எந்த அணி வரும் என்பதில் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவ ஆரம்பித்திருக்கிறது. இன்று நெதர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் நெதர்லாந்து அணியை 91 ரன்கள் நிறுத்தி பாகிஸ்தான் அதை திருப்பி சீக்கிரம் அடித்து வெற்றி பெற்றது

அதே சமயத்தில் அரையிறுதி வாய்ப்பில் இருந்த ஜிம்பாபே அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டது. இதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாகி இருக்கிறது. தற்பொழுது இந்திய அணி தென்னாபிரிக்க அணி உடன் மோதும் போட்டியில் இந்திய அணி வென்றால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.

- Advertisement -

இன்று நெதர்லாந்து அணி உடன் பாகிஸ்தான் விளையாடிய போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தனது ஜெர்சி காலரில் ஒரு முத்திரையை அணிந்து விளையாடினார். அது என்னவென்று சமூக வலைதளங்களில் தேடல் ஆரம்பித்தது.

முகமது ரிஸ்வான் அணிந்து விளையாடிய முத்திரை ஐசிசியால் அவருக்கு தரப்பட்டது. எதற்கென்றால், ஆசியக் கோப்பை மற்றும் உள்நாட்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஏழு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முகமது ரிஸ்வான் அதிக ரன்கள் அடித்து, ஐசிசியால் செப்டம்பர் மாதத்தின் மிகச் சிறந்த வீரராக தேர்வானார். இதற்கு வழங்கப்பட்ட விருது முத்திரையை அணிந்துதான் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது!