இரண்டாவது டெஸ்ட் ஐந்து நாட்கள் நடக்காது; இந்தியாவின் பிளேயிங் லெவன் இதுதான்! – வாசிம் ஜாபர் திட்டவட்டம்!

0
335
Jaffer

இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. இதற்கு அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வென்று இந்திய அணி இந்தத் தொடரில் முன்னணியில் இருக்கிறது!

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் இந்திய அணிக்கு இந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது மிக முக்கியமானது. இந்த வகையில் நாளை இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது முக்கியம்!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பேட்டிங்கின் சகல இடங்களிலும் வீரர்கள் தங்களின் பங்களிப்பை அளித்திருந்தார்கள். அதேபோல் பந்து வீச்சிலும் இருந்தது. ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் தொடரில் அஸ்வின் இந்திய அணியின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஆவார். அவர் கடந்த ஆட்டத்தில் ஒரே ஒரு விக்கெட் மட்டும் எடுத்து இருந்ததுதான் சிறிய கவலைக்குரிய விஷயம் மற்றபடி இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது.

இந்த நிலையில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் மிர்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள்? என்பது குறித்து, இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
” உண்மையைச் சொல்வதானால், மிர்பூர் டெஸ்ட் ஐந்து நாட்கள் நீடிக்கும் என்று நான் பார்க்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டி ஆடுகளத்துடன் ஒப்பிடும்பொழுது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்குத்தான் மிகவும் சாதகமாக இருக்கும். எனவே இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என்ற கூட்டணி சரியாக இருக்கும் ” என்று கூறியுள்ளார்!

நாளை துவங்க உள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் பற்றி பேசிய அவர்
” இந்தியா கடந்த ஆட்டத்தில் விளையாடிய அணி உடன்தான் செல்லும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது மிர்பூர் ஆடுகளத்திற்கு சரியானது என்று உங்களுக்கே தெரியும். நாளை நடைபெற உள்ள ஆடுகளம் பந்துவீச்சுக்கு முதல் போட்டி ஆடுகளத்தை விட சாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்!” என்று மிக உறுதியாகக் கூறியுள்ளார்!