“அவர் இப்படி ஆடுவார் என்று நினைக்கவில்லை”!’- சூர்யகுமார் யாதவின் எழுச்சி குறித்து ஆஸ்திரேலியா கிரேட் புகழாரம்!

0
452

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெற இருக்கிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது .

இந்தப் போட்டி தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் . மேலும் துணை கேப்டனாக இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் .

- Advertisement -

இந்திய அணியின் ஸ்டார் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் கடந்த வருடம் முதலே டி20 போட்டிகளில் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார் . மேலும் அவர் கடந்த வருடத்திற்கான ஐசிசி யின் சிறந்த t20 ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 46 டி20 போட்டிகளில் ஆடி உள்ள சூரியகுமார் யாதவ் 1563 ரண்களை எடுத்து இருக்கிறார் . அவரது சராசரி 46.41 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 180.34.

கடந்த ஒரு வருடமாகவே டி20 கிரிக்கெட்டில் இந்தியா அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் சூரியகுமார் யாதவ் பற்றி வெகுவாக பாராட்டி பேசி இருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அவர் இதுகுறித்து” கடந்த ஒரு வருடமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூரியகுமார் ஆடிவரும் விதம் எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது . அவர் இவ்வளவு தொடர்ச்சியாக இப்படி அதிரடியாக ஆடுவார் என்று நான் நினைக்கவில்லை என்று கூறி இருக்கிறார் .

மேலும் இது பற்றி அவர் தொடர்ந்து பேசுகையில் “விளையாட்டில் புதுவிதமான முயற்சிகளை செய்து பார்ப்பது மற்றும் திறமை வாரியாக டி20 கிரிக்கெட்டில் அவரை விட ஒரு சிறந்த வீரரை நான் பார்க்கவில்லை மேலும் கடந்த ஒரு வருடமாக அவர் விளையாடி வரும் விதம் அதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறியிருக்கிறார் .

- Advertisement -

ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளில் இது போன்ற முயற்சிகளை வீரர்கள் செய்து பார்ப்பார்கள் ஆனால் சர்வதேச அளவில் இது போன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவது அசாத்தியமானது ஆனால் அதனை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது அவர் ஒரு சிறந்த வீரர் என காட்டுகிறது என்று கூறியிருக்கிறார் . மேலும் மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தையடிக்கும் அவரது திறமை தென் ஆப்பிரிக்கா அணியின் ஏபி.டிவில்லியர்ஸ் உடன் அவரை ஒப்பிட வைத்தது என்று கூறியவர் . இப்போது அதை யாரும் செய்வதை விட அவர் மிகத் திறமையாக செய்து கொண்டிருக்கிறார் . விக்கெட் கீப்பருக்கு பின்னால் மற்றும் பைன் லெக் திசைகளில் அவர் அடிக்கக் கூடிய ஷாட்கள் குறிப்பிடத்தக்கவை என்று கூறி முடித்தார் பாண்டிங்.