டி20 உலகக்கோப்பையில் பும்ராவுக்கு மாற்று வீரரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ!

0
213
Bumrah

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 22-ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது!

இந்த நிலையில் இந்த டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து காயத்தின் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா வெளியேறினார்.

ஆகையால் ஆஸ்திரேலியா கிளம்பிய இந்திய அணியில் டி20 உலகக் கோப்பைக்கான 14 வீரர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். 15ஆவது மற்றும் பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது சமி இல்லை முகமது சிராஜ் இடம் பெற அதிக வாய்ப்பு இருந்தது. இந்த நேரத்தில் முகமது சமி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். முகமது சிராஜ் தென்ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடினார்.

எனவே இதன் முடிவுகளை தெரிந்து கொண்டு பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்று அறிவிக்க இந்திய அணி நிர்வாகம் காத்திருந்தது. நேற்று முகமது சாமி முழு உடற் தகுதியை எட்டியதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முகமது சமியா இல்லை முகமது சிராஜா? என்ற கேள்வி எல்லா மட்டத்திலும் இருந்தது. தற்போது சில நிமிடங்களுக்கு முன்பு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக முகமது சமியை அறிவித்திருக்கிறது. ஒருவழியாக 15 பேர் கொண்ட இந்திய அணி தற்போது முடிவாகி இருக்கிறது!