உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பேன்ட் அணிந்த காரணம் இதுதான்

0
2124
Team India in WTC Final

அனைவரும் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணி முன்பு அறிவித்து அதே அணியுடன் களமிறங்குகிறது. அதன் அடிப்படையில் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பக்கம் நியூசிலாந்து அணி ஒரு ஸ்பின் பவுலர் கூட இல்லாமல் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் (டிரென்ட் போல்ட், நெயில் வாக்னர், ஜேமிசன் மற்றும் சவுத்தீ) மற்றும் ஆல்ரவுண்டர் வீரரான காலின் டீ கிராண்ட்ஹோமி உடன் களமிறங்கியுள்ளது.

தங்களது ஜெர்சியில் கருப்பு பேண்டுடன் களம் இறங்கிய இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது ஜெர்சிக்களில் கருப்பு பேண்ட் அணிந்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. அதற்கு காரணம் நேற்று பத்மஸ்ரீ மில்கா சிங் இயற்கை எய்தினார். தனது 91வது வயதில் அவரது உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது.

மில்கா சிங் செய்த சாதனைகள்

மிகா சிங் இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை செய்து இருக்கிறார். 1958 ஆம் ஆண்டு நடந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல ஆர் 958 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடரில் 440 யார்ட்ஸ் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும் 1962ஆம் ஆண்டு நடந்த ஆசிய கேம்ஸ் தொடரில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், 4×400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல 1958ஆம் ஆண்டு தேசிய அளவில் நடந்த விளையாட்டு தொடரிலும் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கப்பதக்கம் மில்கா சிங் வென்றிருக்கிறார்.

மேலும் இந்திய ராணுவத்திலும் அவர் பணி புரிந்து இருக்கிறார். பல சாதனைகளை தனது வாழ்வில் புரிந்த மில்கா சிங் தனது 91வது வயதில் நேற்று இந்த உலகை விட்டுப் பிரிந்தார். நாட்டுக்காக பல சாதனைகளை படைத்த அவருக்கு அவருக்கு மரியாதை நிமித்தமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது ஜெர்சிக்களில் கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு தற்போது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கிறார்கள்.