இன்று நான் இந்த நிலையில் சிறப்பாக விளையாட எம்எஸ் தோனி கூறிய அறிவுரை தான் காரணம் – தோனி கூறிய அறிவுரையை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா

0
53

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக விளையாடியது. குஜராத் தலையை மிக சிறப்பாக வழிநடத்தி அதே சமயம் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக சிறப்பாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார்.

15 ஆட்டங்களில் சராசரியாக 44.27 மற்றும் 131.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இந்திய அணியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 12 பந்துகளில் 30* ரன்கள், மூன்றாவது போட்டியில் 21 பந்துகளில் 31* ரன்கள் அதேபோல சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது போட்டியில் 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருக்கிறார்.

நான் இவ்வளவு சிறப்பாக விளையாடுவதற்கு தோனி கூறிய அறிவுரை தான் காரணம்

4வது போட்டி நடந்து முடிந்த பின்னர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையில் ஒரு உரையாடல் நடந்தது. அந்த உரையாடலில் தினேஷ் கார்த்திக் உங்களுக்குள் எப்படி இந்த மாற்றம் வந்தது. குஜராத் அணிக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினீர்கள் அதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியிலும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், எப்படி இது சாத்தியமானது என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா”இவையெல்லாம் மகேந்திர சிங் தோனி இடம்பெற்ற அறிவுரை காரணமாக தான். ஒருமுறை அவரிடம் சென்று நெருக்கடியான நிலையில் இருந்து எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்று ஐடியா கேட்டேன். அதற்கு அவர் சிம்பிளாக ஒரு விஷயம் கூறினார்.

எப்போதும் உன்னுடைய ஸ்கோர் என்ன என்பதில் நீ கவனம் செலுத்தக்கூடாது. உன்னுடைய அணிக்கு என்ன ஸ்கோர் தேவைப்படுகிறது என்று புரிந்து கொண்டு அதில் தான் உன்னுடைய முழு கவனம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் எல்லாம் சரியாக நடக்கும்” எடmன்று எம்எஸ் தோனி கூறியதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் மகேந்திர சிங் தோனி தனக்கு கொடுத்த அறிவுரை தனது மூளைக்குள் இன்னும் அப்படியே பதிந்து உள்ளது என்றும் அந்த அறிவுரை தான் என்னை இன்று இந்த நிலையில் சிறந்த கிரிக்கெட் வீரராக நிலைநிறுத்தி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.