“ரோகித் சொன்னது.. இந்த பையன் பெரிய மூளைக்காரன்.. இன்னைக்கு போட்டி முக்கியமானது!” – இந்திய முன்னாள் வீரர் முக்கிய பேட்டி!

0
811
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இன்று உள்நாட்டில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆகவும், ருத்ராஜ் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் நிறைய இளம் வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா இருவர் பற்றியும், இந்தத் தொடர் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “ரிங்கு சிங்குக்கு இது ஒரு பெரிய போட்டி. ஒரு பெரிய வாய்ப்பு என்று அவருக்கு தெரியும். அவர் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.

- Advertisement -

அவர் இந்த நிலையில் இருப்பதற்காகவும், இப்போது இந்தியாவில் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கு எதிராக விளையாடுவதற்கும், எதிர்காலத்தில் இந்தத் தொடர் மிக முக்கியமானது என்று அவர் அறிவார். ஃபினிஷர் ஆக விளையாடுவது எளிதானது கிடையாது. அவர் உள்ளே வரும் பொழுது 10, 12 பந்துகள்தான் இருக்கும்.

திலக் வர்மா இரண்டு பரிணாமங்களை அணிக்கு கொண்டு வருகிறார். அவருடைய பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு இருக்கிறது. ஆனால் நான் சொல்வது இது மட்டுமே கிடையாது. நான் கூறுவது அவருடைய பேட்டிங் மற்றும் தலைமைத்துவ திறமை.

அவரை நீங்கள் எப்போது பார்த்தாலும் அவர் அச்சமற்றவராக விளையாட்டில் இருப்பார். அவர் ஒரு இளம் வீரர். ரோகித் சர்மா இவருக்கு நல்ல கிரிக்கெட் மூளை இருக்கிறது என்று அடிக்கடி சொல்வார். ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பொழுது, இவர் நல்ல ஆலோசனைகளை கூறியிருக்கிறார். திலக் வர்மாவின் இந்த திறமை இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானது!” என்று கூறி இருக்கிறார்!