“ரோகித்துக்கு சதம் அடிக்க கற்றுத்தர தேவையில்ல.. நைட் தூக்கத்துல முழிப்பு வந்துடுது..!” – அஸ்வின் உருக்கமான பேச்சு!

0
4129
Ashwin

இந்திய உலகக்கோப்பை அணியில் கடைசி நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றார். அக்சர் படேல் காயம் அடைந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னையில் விளையாடியது. அந்த போட்டியில் மட்டுமே ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மீதி பத்து போட்டிகளிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட அணி நிர்வாகம் போட்டிகளின் போது உடனுக்குடன் எடுக்கும் முடிவுகளை, களத்திற்குள் மிகச் சரியாக ரவிச்சந்திரன் அஸ்வின் கொண்டு வந்தார். மேலும் கேப்டனுக்கு ஆடுகளம் குறித்த தன்னுடைய தனிப்பட்ட அறிவுரைகளையும் கூறியிருந்தார்.

இப்படி அணியோடு மிகவும் நெருக்கமான முறையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பயணம் இருந்தது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி பற்றி பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ரோகித் சர்மாவுக்கு சதம் எப்படி அடிக்க வேண்டும் என்று யாரும் கற்றுத் தரத் தேவையில்லை. அவர் என்ன இன்டெண்ட் காட்டினார் என்பது தான் முக்கியம். இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் முக்கிய நேரத்தில் விழுந்துவிட்டது.

- Advertisement -

சுழற் பந்துவீச்சாளர்கள் ஸ்ரேயாஸ் ஐயரால் துவம்சம் செய்யப்பட்டார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் ஆட்டம் இழந்ததால் இதை எங்களால் பெற முடியவில்லை. அவர் ஃபுல் சாட்டை சிறப்பாக விளையாட நிறைய பயிற்சி செய்தார். அவர் அதில் இரண்டு முறை ஆட்டம் இழந்தார். ஆனால் எத்தனை முறை மிகச் சிறப்பாக அடித்திருக்கிறார் என்று பாருங்கள்.

எங்களது உலகக்கோப்பை பயணம் எப்படி இருந்தது என்று சிந்திக்க எனக்கு இரண்டு மூன்று நாட்கள் ஆனது. இறுதிப் போட்டிக்கு முன்பாக நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் போட்டிக்குப் பிறகு உணர்ச்சி தட்டையானது. அது வீரர்களை காயப்படுத்துகிறது. இது குறித்து யோசித்தால் தூக்கத்திலிருந்து எழுந்து விடுகிறேன்.

இந்த உலக கோப்பையில் நாங்கள் ஒரு அற்புதமான பிராண்ட் கிரிக்கெட் விளையாடினோம். அதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் எடுத்த முயற்சி மற்றும் அவர்களுடைய மிகச் சிறப்பான திட்டங்கள்!” என்று கூறியிருக்கிறார்!