தோனிக்கு இதான் கடைசி ஐபிஎல்-ன்னா, அடுத்த கேப்டனா இப்படியொரு ஆள் தான் வரணும் – முன்னாள் இந்திய வீரர் பேட்டி!

0
1478

தோனிக்கு இது தான் கடைசி ஐபிஎல் என்றால், அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் கேப்டன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரக்யன் ஓஜா.

2023 ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதற்கு முன்பு நவம்பர் 15 ஆம் தேதி வீரர்களை வெளியேற்றும் மற்றும் தக்க வைக்கும் பட்டியல் வெளியிடப்பட்டது.

- Advertisement -

சென்னை அணியுடன் தொடர்ந்து மனக்கசப்பில் இருந்து வந்த ஜடேஜா, இனி சென்னை அணிக்கு விளையாடமாட்டார். வேறு அணிக்கு சென்று விடுவார் என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்த விஷயத்தில் தோனி தலையிட்டு சுலபமாக முடித்தார். ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என்று கூறப்படுகிறது. ஜடேஜா மீண்டும் கேப்டன் பொறுப்பு ஏற்று விளையாடுவாரா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது.

ஒருவேளை ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்தால் அடுத்த கேப்டனாக நியமிக்க தகுதியான ஒரு வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற ஐபிஎல் ஏலத்தில் எடுக்க முயற்சிக்கலாம்.

- Advertisement -

இந்நிலையில் தோனி வரும் ஐபிஎல்-லுடன் ஓய்வு பெற்று விட்டால் அடுத்த கேப்டனாக வருபவர் இப்படி இருக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிரக்யன் ஓஜா.

“தோனி அணியில் இருக்கிறார் என்றால் அவர்தான் கேப்டனாக நிச்சயம் இருக்க வேண்டும். அவரை போன்று யோசிக்க வேறு எவராலும் முடியாது. கடந்த ஐபிஎல் தொடரே அதற்கு சாட்சி. தோனியை வைத்துக்கொண்டு வேறு ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்றால் அது எப்படி சரியாக இருக்கும்?.

தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என்றால் அடுத்து வரும் கேப்டன் குறைந்தபட்சம் 5-6 வருடங்கள் கேப்டன் பொறுப்பில் இருப்பவராக தேர்வு செய்யவேண்டும்.

பொதுவாக சென்னை அணி ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றும் பழக்கம் இல்லாத அணி. வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும், அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக விளையாட வைத்திருக்கிறார்கள். ஒரு போட்டி இல்லை என்றாலும் அடுத்த போட்டிகளில் வீரர்கள் நன்றாக செயல்பட்டும் காட்டி இருக்கிறார்கள்.

கடந்த வருடம் என்னை கேட்டிருந்தால், கேன் வில்லியம்சனை எடுத்து அடுத்த கேப்டனாக்கலாம் என கூறியிருப்பேன். தோனிக்கு பின் சில வருடங்கள் அணியை நன்றாக எடுத்துச்செல்வார் என கூறியிருப்பேன்.

தற்போது ஐபிஎல் ஏலத்திலும் வில்லியம்சன் இருக்கிறார். ஆனால் அவரது பார்ம் சரியாக இல்லை. கேப்டன் பொறுப்பும் சற்று சறுக்களை சந்தித்துள்ளது. சென்னை அணி இதனை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் அவர் 5-6 வருடங்கள் விளையாடுவாரா என்பதையும் அணி நிர்வாகம் சரியாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.