“புதிய பிசிசிஐ தலைவர் இப்படித்தான்” – கங்குலியை கடுமையாக தாக்கிப் பேசிய ரவிசாஸ்திரி!

0
536
Ravi shasthri

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்து வந்தார். தற்பொழுது இவர் மாற்றப்பட்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்த ரோஜர் பின்னி புதிய பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த காலக்கட்டம் சர்ச்சையான சில சம்பவங்கள் நிகழ்ந்த காலக்கட்டமாகும். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய விராட் கோலி மொத்தமாக கேப்டன் பதவியை துறந்தார். இதற்குப் பின்னால் சவுரவ் கங்குலியின் நெருக்கடிதான் காரணமாக இருந்தது என்று பரவலாகப் பேசப்பட்டது.

- Advertisement -

அடுத்து இவர் பிசிசிஐ தலைவராக ஆவதற்கு முன்னே சச்சின், லட்சுமண் இடம்பெற்றிருந்த ஒரு உயர் குழுவில் இடம் பெற்று இருந்தார். இந்தக் குழு இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளரை தேர்வு செய்தது. இந்த நேரத்தில் பயிற்சியாளர் நேர்முகத் தேர்வுக்கு வந்த ரவி சாஸ்திரியை கங்குலி சந்திக்காமல் அவமானப்படுத்தியதாக ரவி சாஸ்திரியே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பிசிசிஐ தலைவராக கங்குலி நீக்கப்பட்டு புதிய தலைவராக ரோஜர் பின்னி கொண்டுவரப்பட்டது குறித்து பேசியுள்ள ரவிசாஸ்திரி அதில் மறைமுகமாக கங்குலியை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். ரோஜர் பின்னி மற்றும் ரவிசாஸ்திரி இருவரும் இணைந்து விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி புதிய பிசிசிஐ தலைவர் பற்றி கூறும் பொழுது ” ரோஜர் பின்னி மிகவும் அன்பானவர். அவர் தனக்கென ஒரு சுய சிந்தனையைக் கொண்டவர். அவர் வளைந்து கொடுக்கக் கூடியவர் கிடையாது. அவர் பேச ஆரம்பித்தால் அவர் பேச்சுக்கு மற்றவர்கள் காதுகள் திறக்கும் குறிப்பாக அவர் கிரிக்கெட் பற்றி பேசினால் ” என்றார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி மறைமுகமாக இன்னும் கடுமையாக கங்குலியைத் தாக்க ஆரம்பித்தார். அதில்
” அவர் தலைவராக வந்ததற்கு நான் பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நாங்கள் உலக கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக விளையாடினோம். அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்ததால் அவருக்கு அனுபவம் இருக்கிறது. அதிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக மாறுகிறார். இது மட்டுமில்லாமல் மேலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் உலகக் கோப்பையை வென்ற வீரர் ஒருவர் முதல் முறையாக பிசிசிஐக்கு தலைவராக வருகிறார். அவருடைய தகுதிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டது. இந்தப் பதவியை ஏற்க அவர் எல்லா பெட்டிகளையும் டிக் செய்து விட்டார் ” என்று கங்குலிக்கு இப்படியான பொறுப்புகள் வகித்து அனுபவம் இல்லை என்றும், அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர் கிடையாது என்றும் மறைமுகமாக தாக்கி முடித்திருக்கிறார்!