இலங்கையை மீண்டும் சிக்கலுக்குள் தள்ளிய நமீபியா அணி!

0
11902
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் இன்று நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின!

தகுதிச் சுற்றில் ஏ பிரிவில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இலங்கையை நமீபியா அணி வீழ்த்தி இருந்தது. யுஏஇ அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தி இருந்தது.

- Advertisement -

இந்த வகையில் இன்று நடந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்து பிரதான சுற்றுக்கு இடம் பெறும் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

ஆனால் பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. இதனால் பொறுமையாக ஆடி 15 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழப்பு என்ற நிலைக்கு வந்த பின்னும், அடுத்த ஐந்து ஓவர்களுக்கு அடித்து ஆடும் எண்ணமில்லாமல் நமீபியா பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு பவர் பிளேவில் விக்கெட் இல்லாமல் 50 ரன்களுக்கு மேல் கிடைத்தது. இதனால் மிக எளிதாக நெதர்லாந்து அணி வெற்றி பெறும் என்று நினைக்கையில், ஆட்டத்தின் 14, 16, 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் திடீரென்று விழுந்து ஆட்டத்தில் திருப்பம் உண்டானது. ஆனாலும் நிலைமையைச் சமாளித்து மூன்று பந்துகள் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வென்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நமீபிய அணி அடுத்து யுஏஇ அணியுடன் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் நமீபிய அணி வென்றால் எளிதாக அடுத்த சுற்றுக்கு போய்விடும். அதேசமயத்தில் நெதர்லாந்து அணியும் 4 புள்ளிகளுடன் இருக்கிறது.

ஆனால் இலங்கை அணி இன்று யுஏஇ அணியுடன் மோதும் போட்டியிலும், அடுத்து நெதர்லாந்து அணியுடன் மோதும் போட்டியிலும் கட்டாயம் வென்றே ஆகவேண்டும். அதே சமயத்தில் இந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் இலங்கை அணி தகுதி சுற்றில் தோற்று உலகக்கோப்பையில் விளையாடாமல் வெளியேறும்.

இலங்கை அணியை வென்று ஒரு தலைவலியை உருவாக்கியது நமீபியா அணி ; தற்பொழுது நெதர்லாந்து அணி உடன் தோற்றும் ஒரு தலைவலியை இலங்கை அணிக்கு உருவாக்கியிருக்கிறது நமீபியா அணி. அது என்னவென்றால் ; இந்தப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தால், இலங்கை அணி அடுத்து இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டும் போதும், ரன் ரேட் இலங்கை அணிக்கு ஒரு பிரச்சனையாக இருந்திருக்காது. ஆனால் இப்பொழுது நெதர்லாந்து அணியுடன் நமீபியா அணி தோற்றதால், இலங்கை அணி நல்ல ரன் ரேட்ட்டில் வெள்ள வேண்டியது அவசியமாகிவிட்டது!