கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை பிடிக்கப்படாத அதிசய கேட்ச் – வீடியோ உள்ளே!

0
8075
Bigbash

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஸ் லீக் டி20 போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இவற்றில் உன் உலகத்தைச் சேர்ந்த பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள் . வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்து பிப்ரவரி முதல் வாரம் வரை நடக்கும் இந்த தொடர் ஆனது 2022-23 சீசனுக்கான பிக் பாஸ் லீக் டி20 தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

புத்தாண்டு தனமான இன்று நடைபெற்ற போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியினரும் மெல்போன் ஸ்டார்ஸ் அணியினரும் மோதினர் . இதில் முதலில் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி அபாரமாக அடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய மெல்போன் ஸ்டார்ஸ் இறுதி வரை போராடி 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போன் ஸ்டார்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது.. இது பிரிஸ்பேன் அணியினர் பெறும் இரண்டாவது வெற்றி ஆகும் .

பிரிஸ்பேன் அணியின் ஜோஸ் பிரவுன் அபாரமாக ஆடி 23 பந்துகளில் 62 ரன்களை எடுத்தார் . இதில் ஆறு சிக்ஸர்களும் நான்கு பௌண்டரிகளும் அடங்கும். இவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆட்டத்தின் 19வது ஓவரில் நடைபெற்ற ஒரு சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 12 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் மார்க் ஸ்டிக்கிடி வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார் ஜோர்டான் சில்க்.
அதேபோல் இரண்டாவது பந்தையும் சிக்ஸருக்கு விலாச தூக்கி அடித்தார்.

பந்து எல்லைக் கோட்டின் அருகே உயர்ந்து சிக்ஸருக்கு செல்வது போலவே சென்றது ஆனால் எல்லை கோட்டின் அருகில் இருந்த பிரிஸ்பேன் ஹீட் அணியின் வீரர் மைக்கேல் நாசர் ஜம்ப் செய்து பந்தினை பிடித்தார் . அப்போது அவரது பேலன்ஸ் அவரை எல்லை கோட்டிற்கு வெளியே இழுத்ததால் லாவகமாக கையில் வைத்திருந்த பந்தை மைதானத்திற்குள் வீசிவிட்டு இவர் எல்லை கோட்டை தாண்டி சென்று மறுபடியும் வந்து கேட்ச் பிடித்தார் . இது மூன்றாம் நடுவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

நடுவர்கள் ரீப்ளே செய்து பார்த்ததில் அவர் வீசிய பந்தானது அவர் எல்லைக் கோட்டிற்கு வெளியே இருந்து பந்தை மறுபடியும் ஆடுகளத்திற்குள் வீசிவிட்டு வந்து பிடித்ததாக அவுட் கொடுத்தனர்.ஆனால் மற்ற சில கோணங்களில் பார்க்கும் பொழுது அவர் எல்லைக் கோட்டை தாண்டி பந்தை கேட்ச் பிடித்து விட்டு காலை எல்லை கோட்டிற்கு அப்பால் வைத்தது போல் இருந்தது . இதனால் இந்த கேட்ச் கிரிக்கெட்டின் ஒரு அற்புதமான கேட்ச் ஆகவும் அதே நேரம் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் ஆகவும் பார்க்கப்படுகிறது