2028 முதல் டெஸ்ட் தொடர்கள் இப்படி நடக்கக்கூடாது..  எம்சிசி ஐசிசிக்கு அதிரடி பரிந்துரை

0
67
MCC

1788 ஆம் ஆண்டு கிரிக்கெட் விதிகளை வெளியிட்ட மெர்லிபோன் கிரிக்கெட் கிளப்பின் சட்டங்களை இன்று வரை தொடர்ந்து இருக்கின்றன. இதைச் சுருக்கமாக எம்சிசி என்று அழைக்கிறார்கள்.

தற்பொழுது இந்தச் சட்டங்களில் ஏதாவது திருத்தங்களை செய்து கொள்ளக்கூடிய அதிகாரத்தை ஐசிசி பெற்று இருக்கிறது. ஆனாலும் கிரிக்கெட் சட்டங்களுக்கான காப்புரிமை எம்சிசி இடமே இருக்கிறது.

- Advertisement -

இந்த எம்சிசி கிரிக்கெட் கௌரவ அமைப்பு கிரிக்கெட் தொடர்பான பல விஷயங்களில் ஐசிசிக்கு ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகள்வைக்கும் அமைப்பாக இருந்து வருகிறது.

இந்த முறை தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த எம்சிசி கூட்டத்தில் உலக கிரிக்கெட் குறித்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி போட்டியை வென்று தொடரை டிரா செய்தது.

- Advertisement -

சிறப்பு வாய்ந்த அந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி கூடுதலாக இருந்திருந்தால் அது மிகச் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும் என்று எம்சிசி கருதுகிறது.

எனவே அடுத்து 2028 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பத்திலிருந்து குறைந்தபட்சம் இரு நாடுகளுக்கு இடையே ஆன டெஸ்ட் தொடர் 3 போட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதேபோல் போட்டியை நடத்தக்கூடிய நாடு மொத்த ஊடக உரிமையையும் எடுத்துக் கொள்ளும். எனவே இந்த விஷயத்திலும் சில மாற்றங்கள் தேவை என எம்சிசி விரும்புகிறது. அடுத்து போட்டியை நடத்தக்கூடிய நாடு வந்து விளையாடக் கூடிய நாட்டு அணியின் பயணச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : “பதவியால் மரியாதை வராது.. வீரர்கள் கேப்டனை மதிக்க இதை செய்யனும்” – தோனி கேப்டன்சி மந்திரம்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிராவில் முடிவதோடு, முதல் போட்டியை தோற்கும் அணியால் தொடரை வெல்ல முடியாது என்கின்ற நிலை, முதல் போட்டியின் முடிவிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக தொடரில் சுவாரசியம் அங்கேயே அமுங்கி விடுகிறது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு எம்சிசி தற்பொழுது புதிய கோரிக்கையை ஐசிசிக்கு வைத்திருக்கிறது