மேட்ச் ரத்து.. டி20 உலககோப்பை இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. அகர்கர் செய்யும் பெரிய தவறு!

0
1404
Agarkar

இந்திய அணி உலக கோப்பையை வென்று இத்துடன் 12 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஐசிசி தொடரை வென்று 11 வருடங்கள் ஆகிறது.

தற்போது உலக கிரிக்கெட்டில் நிறைய இளம் திறமைகளை உருவாக்கும் நாடாகவும், உலக கிரிக்கெட்டில் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் அளவுக்கான வருமானம் கொண்ட கிரிக்கெட் நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது.

- Advertisement -

இந்தியாவில் 16 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தற்பொழுது அதனுடைய உச்ச பலனை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் டி20 கிரிக்கெட் பக்கம் திரும்ப, மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐபிஎல் தொடர் அளவற்ற வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இப்படி இருக்கும் பொழுது இந்திய கிரிக்கெட் அணி எந்த ஒரு உலகக் கோப்பைகளையும் ஒரு தசாப்தம் தாண்டி வெல்லாமல் இருப்பது, மிகப்பெரிய கிரிக்கெட் நாடான இந்தியாவுக்கு தர்ம சங்கடமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. சொல்லப்போனால் ஒரு உலகக் கோப்பை இந்திய அணிக்கு உடனடி தேவையாக இருக்கிறது.

இந்த நிலையில் தான் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், சில முக்கிய விஷயங்களில் திசை தெரியாமல், தவறான முடிவுகளை எடுத்தது தடுமாறிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறுவார்களா? என்பது குறித்து முடிவு கண்டறியப்படவில்லை. இதன் காரணமாக தோராயமாக எந்த இந்திய அணி டி20 உலக கோப்பைக்குச் செல்லும் என்கின்ற தீர்மானமும் இல்லை. இந்தத் தெளிவு இல்லை என்றால், ஒரு கோப்பையை வெல்வது எப்பொழுதும் கடினம்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா இல்லையா என்பதை இப்பொழுதே தீர்மானம் செய்ய வேண்டியது தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கர் பொறுப்பு. ஒருவேளை அவர்கள் விளையாடுவார்கள் என்றால், அவர்கள் தற்பொழுதே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். விளையாட மாட்டார்கள் என்றால், எந்த வீரர்கள் அவர்களது இடத்தில் இருப்பார்களோ, அவர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து தயார்படுத்த வேண்டும்.

மேலும் இந்திய அணிக்கு உலகக்கோப்பைக்கு முன்பாக வெறும் 5 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஐபிஎல் தொடரை பயிற்சிக் களமாக பயன்படுத்த பார்க்கிறது. ஆனால் ஐபிஎல் தொடரின் தரமும் சர்வதேச டி20 கிரிக்கெட் தரமும் வேறு வேறானவை. எனவே ஐபிஎல் தொடரை வைத்து டி20 உலகக் கோப்பை இந்திய அணியைத் தேர்வு செய்வது பின்னடைவையே கொடுக்கும்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் இந்திய சூழ்நிலையை ஒத்திருக்காது. மெதுவான ஆடுகளங்கள் இருப்பதால் அனுபவ வீரர்களும் தேவை. இப்படி பல தேவைகள் இருக்கின்ற நிலையில்தான், பல குழப்பங்களும் சூழ்ந்து இருக்கிறது. இந்த இடத்தில் தேர்வுகுழு தலைவராக அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினர் செல்லும் பாதை ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்திருக்கிறது!