பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் எதிர்பாராத சில தேர்வுகளும் நீக்கங்களும் நடைபெற்று இருக்கிறது.
இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பும்ரா வருகை ஸ்ரேயாஸ் நீக்கம்
இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சு நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே நீண்ட ஓய்வில் அவர் இருப்பதால் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் மிக முக்கியமாக ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டிருக்கிறார். சர்பராஸ் கானுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கான இடத்தில் ரிஷப் பண்ட் பல மாதங்கள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுகிறார். மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜுரலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆர்சிபி வீரர் அறிமுகம்
மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் எதிர்பார்த்தபடியே ரோகித் சர்மா கேப்டன் ஆக இருக்க ஜெய்ஸ்வால் சுப்மன் கில், விராட் கோலி, கேஎல்ராகுல் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். சுழல் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்,ஆகாஷ் தீப் இவர்களுடன் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய இடதுகை வேத பந்துவீச்சாளர் யாஸ் தயால் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக அர்ஸ்தீப் சிங் இந்திய அணிக்குள் கொண்டு வரப்படவில்லை.
இதையும் படிங்க: மரியாதை குறைவா பேசல.. முன்ன மாதிரி இல்லாம.. இப்போ இந்திய பிளேயர்ஸ் தரமா வர இதுதான் காரணம் – டிராவிட் பேட்டி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (வி. கீ), துருவ் ஜூரல் (வி. கீ), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயால்.