நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்களில் இருந்து விலகுகிறார் இந்திய அணியின் முக்கிய வீரர் !

0
2665

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .

இந்தத் தொடர்களில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர் . பந்துவீச்சில் உம்ரான் மாலிக் குல்தீப் யாதவ் முகமது சிராஜ் ஆகியோர் அருமையாக செயல்பட்டனர் . மொத்தத்தில் அந்த தொடர் இந்திய அணிக்கு ஒரு வெற்றிகரமான தொடராக அமைந்தது உலகக்கோப்பை நடக்க இருக்கின்ற இந்த வருடத்தில் இந்திய அணி ஒரு சிறப்பான தொடக்கத்தை கண்டுள்ளது .

தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவுக்கும் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 தொடர்களைக் கொண்ட போட்டிகளில் ஆட இருக்கிறது . இதில் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது .

இந்தப் போட்டி தொடர்களுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த அணியில் இருந்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக விலகுவதாக அறிவித்துள்ளது பிசிசிஐ .

கடந்த ஆண்டு முதலே இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஸ்ரேயாஸ் ஐயர்.கடந்த வருடத்தில் டெஸ்ட் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அதிகமாக ரண்களை குவித்தவர் இவர் .

தற்போது இவர் முதுகு வலியின் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக இன்று பிசிசிஐ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் சூரியகுமார் யாதவிருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .