2026 டி20 உலக கோப்பை.. தப்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.. தகுதி பெற்ற அணிகளை அறிவித்த ஐசிசி

0
13063

தற்போது 2024 டி20 உலகக் கோப்பையை வெற்றி பெற்றதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரை இலங்கை அணியோடு சேர்ந்து நடத்த உள்ளது.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பையும், தற்போது நடைபெற்ற உலகக் கோப்பையை போலவே 20 அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் பங்குபெறும். இந்த ஐந்து அணிகளும் தங்களுக்குள்ளாகவே மோதி அடுத்த சுற்றுக்கு எட்டு அணிகளாக இரண்டு குழுக்களில் பங்கேற்க உள்ளன.

- Advertisement -

இந்த இரண்டு குழுவிலும் பங்குபெற்ற 8 அணிகள் வெற்றிகள் மற்றும் புள்ளி பட்டியல் அடிப்படையில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அந்த அரை இறுதிப் போட்டியில் தகுதி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் பங்கு பெற்று அதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும். நடப்புச் சாம்பியன் இந்திய அணியோடு இலங்கை அணியும் அடுத்த டி20 உலக கோப்பையை நடத்த உள்ளதால் இந்த இரண்டு அணிகளும் அடுத்த உலக கோப்பைக்கு நேரடியாக தேர்வாகின்றன.

இந்த இரண்டு அணிகளை தவிர்த்து மீதமுள்ள 18 அணிகளில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்த உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுகின்றன. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த அமெரிக்க அடுத்த தொடருக்கு முன்னேறி உள்ளது.

இதில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாத இரண்டு முன்னணி அணிகளான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளோடு சேர்த்து அயர்லாந்து அணியும் அடுத்து நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுகின்றன. ஏனென்றால் இந்த மூன்று அணிகளுமே டி20 தரவரிசையில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்திருக்கின்றன.

- Advertisement -

சர்வதேச டி20 தரவரிசையில் நியூசிலாந்து அணி ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஏழாவது இடத்திலும், அயர்லாந்து அணி 11-வது இடத்திலும் இருப்பதால் இந்த மூன்று அணிகளும் அடுத்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. மொத்தம் 20 அணிகளில் 12 அணிகள் தற்போது தகுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் இன்னும் 8 அணிகள் இருக்கின்றன.

இதையும் படிங்க:முதல்ல நாட்டுப்பற்று வேணும்.. டீம்ல எடுக்கலனா அப்படி பண்ணுவீங்களா.. இந்திய வீரரை விமர்சித்த ஸ்ரீஷாந்த்

இந்த உலகக் கோப்பையில் பங்கு பெற்ற மற்ற எட்டு அணிகள் கனடா, நமீபியா, நேபால், நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய எட்டு அணிகளும் அடுத்த சுற்று தகுதி பெற வேண்டுமானால், தகுதிச் சுற்றுகளில் இந்த அணிகள் பெரும் வெற்றிகளின் அடிப்படையிலேயே மீதம் இருக்கும் எட்டு அணிகளின் இடங்கள் உறுதி செய்யப்படுகின்றன.