நான் 100 மைல் வேகத்தில் பந்துவீச இந்தப் பயிற்சி தான் எடுத்தேன் – சோயப் அக்த்தர் வெளிப்படைப் பேச்சு

0
217
Shoaib Akthar

கிரிக்கெட் போட்டியில் பொறுத்த வரையில் ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் இருக்கும் ஒரு ஆசை எப்படியாவது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி விட வேண்டும் என்பதுதான். நடப்பு ஐபிஎல் தொடரில் கூட இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தொடர்ச்சியாக அதை செய்து வருகிறார்.

இருப்பினும் 2003ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில், பிப்ரவரி 22ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயப் அக்தர் அதிவேக பந்து வீசி கின்னஸ் சாதனை படைத்தார்.

அந்தப் போட்டியில் அவர் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேதத்தில் ( மணிக்கு 100.23 மைல் வேகத்தில் ) பந்து வீசினார். தற்பொழுது வரை அந்த சாதனையை எவராலும் நெருங்க கூட முடியவில்லை. அந்த போட்டியில் தன்னால் எப்படி அந்த வேகத்தில் பந்துவீச முடிந்தது என்றும் அதன் பின்னால் இருக்கும் பயிற்சியை அக்தர் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

டிரக்கை 4 முதல் 5 மைல்கல் இழுத்துக் கொண்டு செல்வேன்

ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் ஒரு கட்டத்தில் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி விடுவார்கள். அதன் பின் மீதமிருக்கும் 5 கிலோ மீட்டர் வேகம் அவர்களுக்குள் தான் இருக்கும். என்னால் ஏன் அந்த 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீச முடியவில்லை என்பதை யோசித்துப் பார்த்தேன்.

பின்னர் இந்த வேகத்தில் பந்து வீச தயாராக வேண்டும் என்று முடிவு செய்தேன். முதலில் டயரை கட்டிக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தேன். பின்னர் சிறிய வாகனங்களை இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். அதன் பின்னர் டிரக்கை எனது தோல்பட்டையும் உதவியுடன் 4 முதல் 5 மணிகள் இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். உடற்பயிற்சி செய்யும் வேலையில் 10 கிலோ எடைக் கற்களுக்கு பதிலாக 20 கிலோ எடை கற்கள் தூக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய சதை நன்கு வலுவானதை உணர்ந்து கொண்ட பின்னர் 22-யார்ட் பிட்ச்சில் பயிற்சி எடுப்பதை தவிர்த்து 26-யார்ட் பிட்ச்சில் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். அங்கே என்னால் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பந்துவீச முடிந்தது. அந்தப் பிட்ச்சில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச வேண்டும் என்கிற இலக்கை எடுத்துக் கொண்டேன். நாட்கள் செல்லச் செல்ல என்னால் அந்த வேகத்தில் பந்து வீச முடிந்தது,நான் தயாரானேன்.

எனது அணி வீரர்களிடம் நான் முன்பே சவால் விட்டிருந்தேன்

2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை அறிவித்த உடனேயே சக்லைன் முஷ்டாக் மற்றும் அசார் மஹ்மூத் இடம் சென்று நான் இந்த உலக கோப்பை தொடரில் அதிவேக பந்து வீச போகிறேன் என்று முன்பே சவால் விட்டிருந்தேன். நான் நினைத்தது போல அதே உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக பந்தை வீசினேன்.

எதிரணி பேட்ஸ்மேன்கள் இவ்வளவு வேகத்தில் எப்படி உங்களால் வந்துவிட முடிகிறது நீங்கள் ஏறக்குறைய எங்களைக் கொன்று விடுவார்கள் போல என்று என்னிடம் கூறினார்கள். நான் எடுத்துக்கொண்ட பயிற்சியை அவரிடம் விவரித்தேன். பின்னர் அவ்வளவு வேகத்தில் பந்து வீச வீச, என்னுடைய முதுகுப் பகுதியில் மற்றும் தொடைப் பகுதியில் சில விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்படும் என்பதை உணர்ந்து பின்னர் என்னுடைய வேகத்தை குறைத்துக் கொண்டேன் என்றும் சோயப் அக்தர் விளக்கிக் கூறியுள்ளார்.

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர் தன்னுடைய கேரியரில் 46 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளையும், 15 டி20 போட்டிகளில் போட்டிகளில் 19 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது